மகத்தான யுத்த வீரனாகிய யோசுவா THIS GREAT WARRIOR, JOSHUA 55-01-19 லேன்டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்ரினாய்ஸ், அமெரிக்கா 1. யோசுவா... கடந்த இரவில் மகத்தான யுத்த வீரனாகிய தாவீதைக் குறித்தும், கிறிஸ்துவுக்குள் அவனுடைய ஸ்தானத்தைக் குறித்தும், அதைக் குறித்து அவன் என்ன செய்தான் என்பதைக் குறித்தும் பார்த்தோம், இன்றிரவு யோசுவாவைக் குறித்துப் பார்ப்போம்... கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவில், வேறொரு மகத்தான வீரனைக் குறித்துப் பார்க்கலாம் அல்லது வேறொருவனுடைய ஜீவியத்தைக் குறித்து பேசலாம். இப்பொழுது இங்கே அநேகரில்லை, பெரும்பாலானவர்கள் தங்கள் சுகத்தையும் மற்ற காரியங்களையும் பெற்றுக் கொண்டு விட்டனர், நான் ஜனங்களை உற்சாகப்படுத்தவும், அவர்களை ஸ்தானத்தில் பொருத்தவுமான (தேவனுடைய) வார்த்தையைக் கொண்டு வர அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறேன். அதைச் செய்யும் படியாக பரிசுத்த ஆவியானவர் என்னை வழி நடத்துவதை உணருகிறேன் (பாருங்கள்-?), இங்கே இருக்கும் இந்த ஜனங்களிடம் தேவனுடைய வார்த்தையை அவ்விதம் கொண்டு வரும்படியாக வழி நடத்தப்படுவதை நான் உணருகிறேன்... நான்-நான் இதைக் கூறப் போகிறேன்: இன்றிரவு இங்கே எத்தனை பேர் கிறிஸ்தவர்களாய் இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்-?... கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்-?, நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பரவாயில்லை... ஏறக்குறைய 99 சதவீதம் பேர், ஒருக்கால் தொண்ணுற்றொன்பதோடு பத்தில் ஒன்பது சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாய் இருக்கிறீர்கள் (பாருங்கள்-?). இன்றிரவு ஒருக்கால் 8 அல்லது 10 பேர் தான் இங்கே கிறிஸ்தவர்களல்லாதவர்கள். பாருங்கள்-? நல்லது இப்பொழுது, நீங்கள் அந்த ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும்-? சரி, அவர்கள் என்னவாயுள்ளார்கள் என்றும், அவர்கள் யாரென்றும், தீயவைகளை எவ்விதம் கையாள்வது என்றும், நீங்கள் அவர்கள் ஸ்தானத்தை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். (புரிகிறதா-?). அப்படியானால் இன்றிரவு சிகாகோவில் கிறிஸ்தவர்களல்லாதோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆகையால் நீங்கள் தான் யுத்த வீரர்களாய் இருக்கப் போகிறீர்கள்; நீங்கள் தான் பிரசங்கியாய் இருக்கிறீர்கள். 2. நான் உங்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, யாரோ ஒருவர்... என்னைக் குறித்து யாரோ ஒருவர் எழுதிய ஒரு விமர்சனத்தைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைகள், நான் அதைக் குறித்து ஒரு போதும் ஒரு முடிவுக்கு வரவில்லை (இப்பொழுது, அது இக்கூட்டத்தில் அல்ல, வேறொரு கூட்டத்தில் நிகழ்ந்தது), அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: ‘சங்கை பிரன்ஹாம் அவர்களே, நீர் ஊக்குவித்தலின் கீழ் இருந்து கொண்டு, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதை நான் கேட்கும் வரை, நீர் ஒரு தேவ மனிதன் என்று நான் உம்மிடத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்’ என்று எழுதப்பட்டிருந்தது, நல்லது, மேலும், ‘அந்த நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் நீர் அதைக் கூறவில்லை’ என்றும் எழுதியிருந்தார். நல்லது, அந்நேரத்தில் அதைக் கூறிக் கொண்டிருந்தது நானல்ல; அவர் தான் அதைக் கூறினார். எனவே அதைக் குறித்து அவரிடம் தர்க்கம் பண்ணுங்கள். அவர் ஒருவரே அதைச் செய்கிறவர். எவ்வாறாயினும், எனதருமை நண்பரே, ஒரு தீர்க்கதரிசி என்பவன் யாரென்று உமக்குத் தெரியுமா-? ஒரு புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசி என்பவன் யாரென்று உமக்குத் தெரியுமா-? அவன் ஒரு பிரசங்கியாயிருக்கிறான், முற்றிலுமாக. ஒரு தீர்க்கதரிசி என்பவன் ஒரு பிரசங்கியாய் இருக்கிறான். ‘தீர்க்கதரிசி’ என்ற வார்த்தைக்கு ‘முன்கூட்டியே அறிவிப்பவன் அல்லது முன்கூட்டியே கூறுபவன்’ என்று அர்த்தம். பிரசங்கி என்றோ அல்லது முன்கூட்டியே அறிவிப்பவன் என்றோ அர்த்தம். இப்பொழுது, நீங்கள் அதற்கான வேத அகராதியை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால் வேதம் அதைக் குறித்து என்ன கூறுகிறது என்று இதோ இருக்கிறது. ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி தீர்க்க தரிசனத்தின் ஆவியாயிருக்கிறது’ என்று வேதம் கூறுகிறது. அது சரியா-? ஆகையால் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கிற நீங்கள் யாவரும் தீர்க்கதரிசிகள் தான். புரிகிறதா-? அது தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி தீர்க்க தரிசனத்தின் ஆவியாயிருக்கிறது. 3.எனவே இப்பொழுது, நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கையில், கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இந்நேரத்தில் அந்த வேத பாகத்திற்கு திருப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது யோசுவா 3-ம் அதிகாரம். அவன் ஒரு மகத்தான யுத்த வீரன், நான் எப்போதுமே இந்த வேத பாகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோசுவாவைப் பாராட்டுகிறேன். கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். மேலும் இப்பொழுது 6-வது- அதிகாரம், அல்லது யோசுவா 5-ம் அதிகாரம் 12-வது வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது. அது முதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற் போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில் தானே புசித்தார்கள். பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்து கொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான். 4.இப்பொழுது, வெறுமனே மற்றொரு ஜெபம். பிதாவே, இவைகள் உம்முடைய வார்த்தைகளாக உள்ளன, இப்பொழுது நீர் இந்த வார்த்தைகளை எடுத்து, அவைகளை மேன்மைப்படுத்தி, எங்கள் ஒவ்வொருவருக்கு முன்பாகவும் அவைகளை வெளிப்படுத்தித் தர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், அப்பொழுது உம்முடைய மகத்தான தாசனாகிய யோசுவாவைக் குறித்த இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை எங்களால் காண முடியும். ஒவ்வொரு இருதயத்திலும் நீர் விதையை ஊன்ற வேண்டும் என்று ஜெபிக்கிறோம்; பரிசுத்த ஆவியானவர் இந்த தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை ஒவ்வொரு இருதயத்திலும் வைப்பாராக. அது விளைச்சலைக் கொடுக்கிற சமயத்தில், நூறு மடங்கு கனிகளைத் தருவதாக. நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 5. இப்பொழுது, நாம் இன்றிரவு இந்த மகத்தான யுத்தவீரனாகிய யோசுவாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், அவன்... இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை விட்டு வெளியே வந்து, தங்களுடைய பிரயாணத்தின் கடைசி கட்டத்தில் இருந்தார்கள். அந்தப் பிரயாணம் மூன்று கட்டங்களைக் கொண்டதாக இருந்தது. முதலாவது அவர்கள் எகிப்திலே இருந்தார்கள்; இரண்டாவது வனாந்தரத்தில் இருந்தார்கள்; மூன்றாவது, பாலஸ்தீனாவில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருந்தார்கள். 6. இப்பொழுது, அநேக ஜனங்கள் முன்னடையாளங்களைக் கொண்டு வேதத்தைப் பொருத்திக் காண்பிக்கிறார்கள், நானே அவ்வாறு செய்வதுண்டு, அதை வனாந்தர பிரயாணத்திற்குப் பிறகு, மகிமைக்குள் பிரவேசித்தல் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இப்பொழுது, இதை அவ்விதமாகப் போதிக்கிற யாராவது ஒருவர் இன்றிரவில் இங்கே இருக்கலாம். என் சகோதர சகோதரிகளே, அது என்னவாய் இருந்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. நான் அதைக் குறித்த என்னுடைய கோட்பாடுகளில் ஒருக்கால் தவறாக இருக்கலாம், ஆனால் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை பரலோகத்திற்கு என்னால் ஒரு போதும் ஒப்பிட முடியாது, காரணம் என்னவென்றால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்களுக்கு யுத்தங்கள் இருந்தன. நான் ஆயிரவருட அரசாட்சியில் விசுவாசம் கொண்டுள்ள ஒருவன். ஒரு ஆயிர வருட அரசாட்சி இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், மனுக்குலம் தேவனை விட்டு வெளியே வந்தது போல, மீண்டும் தேவனிடத்தில் திரும்பிச் செல்லும் ஆயிர வருட அரசாட்சியின் ஆயிரம் வருடங்கள் பூமியில் இருக்கப் போகிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது ஆயிரவருட அரசாட்சியைக் குறிக்கிறது என்றும், அது ஆயிர வருட அரசாட்சியிலுள்ள ஆயிரம் வருடங்களைக் குறிக்கிறது என்றும் நான் விசுவாசிக்கிறேன். 7. நீங்கள் கவனிப்பீர்களானால், அவர்கள் யோர்தானைக் கடந்து சென்றவுடனே, (அது இந்த பூமிக்குரிய பிரயாணத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டு, வேறொரு தேசத்திற்குள் செல்வதைக் குறிக்கிறது,) அவர்கள் - மன்னா (அது ஒரு ஆவிக்குரிய காரியமாக இருந்தது) பெய்யாமல் ஒழிந்தது, அவர்கள் நவதானியத்தைப் புசித்தார்கள். அவர்கள் மீண்டும் தேசத்தின் கனியைப் புசித்தார்கள். ஆயிர வருட அரசாட்சியில்... பாருங்கள், நாம் இப்பொழுது ஆவிக்குரிய மன்னாவைப் புசித்துக் கொண்டு இருக்கிறோம், ஆனால் நாம் முந்தைய நிலைக்குத் திரும்பிச் செல்வோம், அச்சமயத்தில் ஆவிக்குரிய மன்னா நமக்குத் தேவைப்படாது, நாம் மீண்டும் திராட்சைச் செடியின் கனியைப் புசிப்போம். நிலத்தின் கனியையும் தானியத்தையும் புசிப்போம். நாம் வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்போம் என்றும், திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்போம் என்றும் வேதம் கூறுகிறது. நாம் ஆயிர வருட அரசாட்சிக்குள் வரும் போது, நாம் இளைப்பாறுகிற அந்த ஆயிர வருடங்களில், யுத்தங்களோ, தொல்லைகளோ, வியாதியோ, மரணமோ உலகத்தை விட்டு அகன்று போய் இருக்கும், நாம் மகிமைக்குள் போகும் முன்பதாக இங்கே இப்பூமிக்குத் திரும்பி வந்து, கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருடங்கள் இருப்போம். அது வேதாகம போதனையாகும். இப்பொழுது, அது எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று பாருங்கள். அது எகிப்திற்கு ஓர் முன்னடையாளமாக இருந்தது, அது எகிப்திலே தங்கி குடியிருப்பதாகும். அநேக ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். இப்பொழுது, நாம் அறிந்துள்ளபடி, யோசேப்புடைய சரீரமானது வெளியே கொண்டு வரப்பட்டது. ஆனால் எகிப்திலே ஓர் உயிர்த்தெழுதல் இருக்கப் போகிறது, ஏனென்றால் நாம் அறிந்துள்ளபடி, கோத்திர பிதாக்கள் எகிப்திலே அடக்கம் பண்ணப்பட்டனர். அநேக விசுவாசிகள் எகிப்திலே அடக்கம் பண்ணப்பட்டனர். பிரயாணத்தின் இரண்டாவது கட்டத்தில், அவர்கள் வனாந்தரத்திலே இருந்தார்கள், அப்போது அநேகர் மரித்தார்கள், அநேக நீதிமான்களும், மிரியாமும், ஆரோனும், அவர்களில் அநேகரும் இந்த இடைப்பட்ட நேர பிரயாணத்தில் மரித்துப் போனார்கள், அங்கேயும் ஓர் உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். அதற்குப் பிற்பாடு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலும் கூட உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். ஆனால் அந்த மூன்று காரியங்களும், லூத்தரின் காலத்தையும் (அது விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதலாகும், லூத்தர் எகிப்தை விட்டும், வெள்ளைப்பூண்டு பாத்திரங்களை விட்டும், உலக மாம்சத்தை விட்டும் ஜனங்களை வெளியே கொண்டு வருதலையும்), இரண்டாவது ஜான் வெஸ்ரியின் காலத்தையும் (பரிசுத்தமாக்கப்படுதரினூடாக வருகிறதையும்), மூன்றாவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் (அவர்கள் அங்கு மீண்டுமாக அடிமைத்தனத்தினின்று விடுதலையாகி சுதந்திரமாக இருக்கிறதையும்) அடையாளப்படுத்திக் காண்பிக்கிறது. 9. இப்பொழுது, யோசுவாவைக் கவனியுங்கள், அவன் இஸ்ரவேலரோடு எகிப்தை விட்டு வெளியே வந்து, வனாந்திரத்தில் இருந்த போது, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, முதலாவதாக அழைக்கப்பட்டான்... அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து 40 அல்லது 50 மைல் தூர சாலையில் இருந்தனர், அது ஏறக்குறைய 5 நாட்களில் பிரயாணம் செய்து அதைக் கடந்து விடும் தூரத்தில் இருந்தது. அவர்கள் வெளியே வந்த போது, தேவன் அவர்களை வழி நடத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் முணுமுணுத்து, முறையிட ஆரம்பிக்கும் வரை, அவர்கள் அப்பாதையினூடாக அருமையாகச் சென்று கொண்டிருந்தனர். தேவன் அவர்களுக்கு அதைக் கொடுத்திருந்தார், அதன் பிறகு நியாயத்தீர்ப்பின் ஆசனமாகிய காதேஸ்பர்னேயாவுக்கு வந்தனர், அங்கு அவர்கள் தேவனுடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, வந்த வழியே திரும்பிப் போய், 40 வருடங்களாக அலைந்து திரிந்தனர், ஏனென்றால் அவர்கள் தேவனை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது இன்று சபைக்கு எவ்வளவு அழகான முன்னடையாளமாக உள்ளது. அது எவ்வளவாக அதே நடைமுறையில் உள்ளது, தேவன் வேறோரு வழியில் வரலாற்றை மீண்டும் நிகழச் செய்கிறார். சபையானது எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதற்கும், அது இப்பொழுது தங்கள் பிரயாணத்தில் இருக்கிறது என்பதற்கும், அது வாக்குத்தத்தத்திற்குள் போக முடியாமல் அதைப் புறக்கணித்து விட்டது என்பதற்கும் அது முன்னடையாளமாய் உள்ளது. இப்பொழுது, நமக்கு முன்பாக ஒரு அழகான காட்சி உள்ளதே. 10. இப்பொழுது, முதலாவதாக யோசுவா அந்த வனாந்திரத்தில் வழிநடத்தி செல்பவனாய் இருந்தான், அங்கே ஆயிரமாயிரக் கணக்கான சீமான்கள் அந்த வனாந்தரத்தில் இருந்தார்கள், ஆயினும் அந்த வழி நடத்துபவன் அவன் தான் என்று யோசுவா கண்டு கொண்டான், அவன் அந்த ஸ்தானத்துக்கென்று தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவனாயிருந்தான். அவன் அதைக் கடந்து சென்று, மோசே மரித்த போது, அவன் தேவனால் அழைக்கப்பட்டான். தேவன் அவனை அழைத்து, அவனுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, ‘இப்பொழுது, நான் மோசேயோடு இருந்தது போல, உன்னோடும் இருப்பேன். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’ என்றார். 11. தரிசனம் முடிந்த பின்பு, தேவனால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட யுத்த வீரனாகிய யோசுவா... இப்பொழுது, அவன் எரிகோவின் அருகிலிருந்த மதில் சுவரில் நின்று கொண்டிருந்த இந்த இராஜாவை அல்லது இந்த மகத்தான மனிதரை சந்தித்தான், அவன் அப்போது ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருந்தான்; அவன் ஓர் யுத்த வீரனாயிருந்தான். அப்போது, நிஜமாகவே காணக் கூடியதாயிருந்த அக்காரியத்தை அவன் கண்டான். அந்த மதிற்சுவரின் முன்னே நின்று கொண்டு இருந்த இந்த மனிதர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்-? இப்பொழுது, யோசுவா தான் தரிசனங்களைக் கண்டிருந்தான் என்பதையும், கர்த்தர் எவ்வாறு அவனிடம் பேசி இருந்தார் என்பதையும் அறிந்திருந்தான், அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்பதையும் அவன் அறிந்திருந்தான், அவன் பயப்படவில்லை. ஆனால் அவன் அத்தேசத்திற்குள் கடந்து போன போது, மன்னா பெய்யாமல் ஒழிந்தது, அப்போது, தானியங்களை அவர்கள் புசிக்கத் தொடங்கினர். ஒரு நாள் அவன் அந்த வனாந்தரத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவன் எரி- யோர்தானை விட்டு பாறைகளும், குன்றுகளும் உள்ள, பாலைவனமும் வனாந்தரமும் போன்ற இடமாகிய எரிகோவிற்கு வந்து, அங்கே அதனூடாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், அவன் ஓர் மனிதரைக் கண்டான். அம்மனிதர் உருவின தம்முடைய பட்டயத்தோடு நின்று கொண்டிருந்தார், அவர் வெறும் ஓர் மனிதனாயிருந்தார், அவர் ஓர் மனிதனைப் போன்றே காணப்பட்டார். பிரதான யுத்த வீரனாயிருந்த யோசுவாவும் கூட ஒருக்கால் தன்னுடைய பட்டயத்தை உருவிக் கொண்டு, நடந்து சென்று, அவரைச் சந்தித்து, ‘நீர் யார்-? நீர் எங்களைச் சேர்ந்தவரோ, அல்லது நீர் எங்கள் சத்துருவா-?’ என்று கேட்டார். அந்த மனிதர் தன்னுடைய பட்டயத்தை மேலே உயர்த்தி, ‘அல்ல, நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய சேனையின் அதிபதி’ என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. சேனையின் அதிபதி, யார் இந்த சேனையின் அதிபதி-? யோசுவா அவரண்டை சென்று, தன் பாதரட்சைகளை அவிழ்த்து, அவருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, ‘கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்-? என்று கேட்டான். 12. நீங்கள் பாருங்கள், அவன் தன்னுடைய ஸ்தானத்தைப் பெற்ற பிற்பாடு. அவன் பூமியின் மேல் எப்பொழுதும் இருந்ததிலேயே மிகப்பெரிய இராணுவப் படைவீரனாயிருக்க வேண்டியிருந்தது. யோசுவாவைப் போன்ற ஓர் படைத் தலைவன் எந்த நேரத்திலும், எக்காலத்திலும் ஒரு போதும் இருந்ததே கிடையாது, யோசுவாவோடு ஒப்பிடத்தக்கவன் எந்தவிடத்திலும் ஒரு போதும் இருந்ததே கிடையாது. ‘யோசுவா’ என்ற வார்த்தையானது, ‘இயேசு’ என்ற வார்த்தையிலிருந்து வருகிறது, யோசுவா என்ற வார்த்தைக்கு ‘இயேசு’ அல்லது ‘இரட்சகர், மீட்பர்’ என்று அர்த்தம். எனவே அவன் இம்மனிதரைப் பார்த்த போது, அவர் என்னவாக இருந்தார்-? அவர் அதிபதியாக இருந்தார், வேறு வார்த்தைகளில் கூறினால், இஸ்ரவேல் சேனையின் தலைவராயிருந்தார். அந்த தலைவர் கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமல்ல, அது அவர் தாமே. அவர் முதலாவதாக எவ்வாறு காணப்பட்டார்-? அக்கினி ஸ்தம்பத்தில். இப்பொழுதோ அந்த அக்கினி ஸ்தம்பமானது ஒரு மனிதனாக ஆகியிருந்தது. நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அவர் ஒரு மனிதனாக ஆகியிருந்தார். யோசுவா தனித்து நின்று கொண்டு, அது என்னவென்பதைக் அவன் கண்டு கொண்டான்: அது தேவ தூதனாக அவர்களை வழி நடத்தின அக்கினி ஸ்தம்பம் தான் என்பதை அவன் கண்டு கொண்டான், இங்கேயோ அவர் தம்மை சேனையின் அதிபதி என்று அழைத்துக் கொண்டவராய் நின்று கொண்டிருந்தார். அவர் காணக்கூடாத ஒருவராய் இருந்தார். அவர் இன்னும் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இருக்கிறார், அவர் காணக் கூடாதவராயும், கண்ணுக்குப் புலப்படாத- வராயும், சர்வவல்லமை உள்ளவராயும் இருக்கிறார், அங்கே எரிகோ மதிற்சுவரின் முன்பாக அவர் நின்று கொண்டிருந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக அவர் இன்றிரவும் அதே கர்த்தராகிய இயேசுவாக இங்கே இருக்கிறார்: அவர் செயலில் சுட்டிக் காண்பிக்கப்படுகிற ஒரு முன்னடையாளமாய் இருக்கிறார். அப்போதிலிருந்து அநேக அநேக நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக ஆபிரகாமை சந்தித்த மெல்கிசேதேக்கு அவர் தான்: அவர் தகப்பனும் தாயும் இல்லாதவர், நாட்களின் துவக்கமும், வருஷங்களின் முடிவும் இல்லாதவர்: அவர் தான் மெல்கிசேதேக்கு. 13. நாட்களின் துவக்கமும், வருஷங்களின் முடிவும் இல்லாமல், வம்சவராலாறும், தகப்பனும், தாயும் இல்லாத இந்த மகத்தான இராஜா யார்-? உங்களுக்குத் தேவையான விஷயம் இங்கு தான் உள்ளது. இதோ அவர் இருக்கிறார். அவர் ஒரு நாள் கருவாலிமரத்தின் கீழே ஆபிரகாமை சந்தித்தார். அவருடைய வஸ்திரம் முழுவதும் தூசி படிந்திருந்தது, அவர் அந்நிய தேசத்திலிருந்து - அயல் தேசத்திலிருந்து வந்து, சோதோம் கோமாரா பட்டணங்களை நோக்கிப் போகிற தம் பாதையில் இருப்பதாக கூறினார். அது ஏதோவொன்று என்பதை ஆபிரகாம் அடையாளம் கண்டு கொண்டு, உள்ளே சென்று, கொழுத்த கன்றுக்குட்டியைப் பிடித்து, அதை அடித்து, வெளியே கொண்டு வந்தான், பசுவின் பாலையும், அந்தக் கன்றுக்குட்டியின் இறைச்சியையும், நெருப்பிலே சுட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் அவருக்குக் கொடுத்தான். அவர் அந்த பாலைக் குடித்து, இறைச்சியையும், அப்பங்களையும் புசித்தார். ஆபிரகாம் ப-செலுத்தின போது, அம்மனிதர் அவனுக்கு முன்பாக மறைந்து போனார். ஆபிரகாம், ‘நான் தேவனோடு முகமுகமாய் பேசினேன்’ என்றான். காணக்கூடாத சேனையின் மெல்கிசேதேக்கு அங்கே இருந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக அவர் இன்றிரவும் இங்கேயிருக்கிறார். தம்முடைய ஜனங்கள் ஒன்றாகக் கூடிவரும் எல்லாவிடங்களிலும் அவர் இருக்கிறார், ஏனென்றால் அது அவருடைய ஆவிக்குரிய சரீரமாகும்: கிறிஸ்து. ஓ, இன்றிரவு நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்றும், அது மிக அருகில் இருப்பதைக் காண்கிறீர்கள் என்றும் நான் நம்புகிறேன். 14.கவனியுங்கள். என்னுடைய ஆவியானது என்னுடைய நிழலைப் போன்று இருந்து, அது இயற்கையான சரீரம் சார்ந்த ஒரு நிழலாக இருக்குமானால், என்னுடைய நிழலானது சரீரம் சார்ந்த ஆவியாக இருக்கும் என்று கூறுவீர்கள். இப்பொழுது, அந்த சரீரமானது - இயற்கைக்கு மேம்பட்ட கர்த்தராகிய இயேசுவின் சரீரமானது, அது எப்படியிருந்ததோ அதைப் போன்றே, கர்த்தருடைய இயற்கையான சரீரத்தினுடைய நிழலாயிருக்கிறது. மேலும் கவனியுங்கள், அவருக்குள்ளிருந்த சுகமளித்தல்களும், வல்லமையும், தரிசனங்களும், கிறிஸ்துவின் காரியங்களும் அவருடைய நிழலை விட்டு வெளியே போய் விடுமானால், அப்பொழுது கிறிஸ்து கிரியை செய்யக் கூடாத ஒரு நிலையில் இருக்கிறார். அவருடைய இயற்கையான சரீரமானது முடங்கிப் போனதாயிருக்கும். ஏனென்றால் அவருடைய இயற்கையான சரீரம் அசையுமானால், அவருடைய நிழலும் அதனோடு கூட அசைய வேண்டும். பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானத்தின் மூலமாக நாம் கிறிஸ்துவுக்குள் இருப்போமானால், கிறிஸ்துவின் சரீரம் எவ்வாறு அசைகிறதோ அதே விதமாக இது பூமியிலும் அசையும், ஏனென்றால் இது அவருடைய சரீரத்தின் ஒரு நிழலாக இருக்கிறது. ஆமென். அது எப்போதுமே அடையாள அர்த்தம் உடையதாயிருக்கிறது, மேலும் அது இன்றிரவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது. இப்பொழுது, இதை உலகத்தின் காரியங்களை விட்டு வெளியே எடுத்து, தேவனால் முன் குறிக்கப்பட்டு, அவரால் அழைக்கப்பட்டு, அவரால் விரும்பி தெரிந்து கொள்ளப்பட்டு, மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியினாலே கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, இந்த சரீரத்தின் அங்கத்தினர்கள் ஆகிறோம்: அப்பொழுது, ஜீவிக்கிறோம், ஆயத்தமாகிறோம், நாமே ஆவலுடன் செய்ய விரும்புகிறோம். என்னுடைய சரீரம் அசைகிற ஒவ்வொரு முறையும் என்னுடைய நிழலும் அசையும். கிறிஸ்து அசையும் போது, கிறிஸ்துவின் பரிசுத்த ஆவிக்குரிய சரீரமும் அசையும். பரலோகத்திலிருக்கிற கிறிஸ்து எப்பொழுதாவது தம்முடைய இயற்கையான சரீர - அல்லது தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை பூமியில் பெற்றுக்கொள்ளக் கூடுமானால், அது எவ்வாறு அசைய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அவ்விதமாக அது அசையும், அப்பொழுது சம்பவிக்கப் போகும் காரியங்களைக் கவனியுங்கள். அதில் ஜீவன் வரத் தொடங்குகிறது. அவர்கள் அதைப் போதுமான காலம் செயல்படக்கூடாத நிலையில் வைத்திருந்தனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதற்குள் ஜீவனைக் கொண்டு வருகிறார். அது எழுந்து நகரத் துவங்குகிறது, ஏனென்றால் அது அதனுடைய ஸ்தானத்தைக் காண்கிறது. 15. யோசுவா, மோசேயோடு கூட ஒரு வழி நடத்துபவனாய் இருந்தான்... அவன் மோசேயின் கரங்களை உயர்த்திப் பிடித்த அந்நேரத்தில் தான், நாம் முதல் தடவையாக அவனைக் குறித்து கேள்விப்படுகிறோம். இப்பொழுதோ அவர்கள் பிரயாணப்பட்டு விட்டனர், எகிப்தின் குழப்பத்தை விட்டும், வெள்ளைப் பூண்டு பானைகளை விட்டும், உலகத்தை விட்டும் வெளியே வந்து, செங்கடலைக் கடந்து, அக்காரியங்களைப் பின்னால் தள்ளி விட்டு, நாம் அதை இன்று அழைப்பது போன்று ஒவ்வொரு கடற்கரையின் கட்டுகளும் அவிழ்க்கப்பட்டு, ஒரு அந்நிய தேசத்தில், அந்நிய ஜனங்கள் மத்தியில் நடந்து வந்து, கர்த்தரை சேவிக்கும் காட்சி ஓர் அழகான காட்சியாகும். மணல்பாங்கான, வளமற்ற வறண்ட தேசமாகிய எகிப்தை விட்டு விட்டு, ஓர் வனாந்தரமான இடத்தில் அந்நிய ஜனங்கள் மத்தியில் பரதேசியைப் போல சஞ்சரிக்கிற ஒரு நிலைக்கு மாறுவதற்கு அது என்னவொரு முன்னடையாளமாய் உள்ளது, ஆனால் தேவன் உங்களை அதனூடாகக் கொண்டு செல்வார் என்கிற ஒரு வாக்குத்தத்தம் உங்களுக்கு உண்டு. தேவன் இன்றிரவு வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார்... நீங்கள் உலகத்தை விட்டு வெளியே வரும் போது, உங்களுடைய எல்லா பூமிக்குரிய சொந்தங்களை விட்டும் உங்களை நீங்களே வேறு பிரித்துக் கொள்கிறீர்கள், நீங்கள் வழக்கமாகப் போகிற எல்லா பழைய விருந்துகளை விட்டும், உலகப்பிரகாரமான எல்லா கேளிக்கை விளையாட்டுகளை விட்டும், குடிப்பது புகைபிடிப்பது சூதாடுவதை விட்டும், அந்த எல்லா காரியங்களை விட்டும் பிரிந்து வந்து விடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் இதற்கு முன் அறிந்திராத அந்நிய ஜனங்கள் மத்தியில் நடந்து, ‘ஆமென்’ என்று கூறுகிறீர்கள், மேலும் நீங்கள் ஆவியினால் நிரம்பி, சகல காரியங்களையும் விசுவாசித்து, சகல காரியங்களையும் நம்பி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருந்து, உங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, இவ்வுலகத்தில் எதுவுமற்றவராய், உலக ஆசைகள் அற்றவராய், உலகத்தின் காரியங்களை விட்டு விடுகின்றீர்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா-? எகிப்து - அந்த மகத்தான வைத்தியரோடு இருக்கும்படியாக இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்த வீண்பெருமை பேசுகிற வைத்தியர்களை விட்டு விட்டனர். அவர்கள் தூதர்களின் ஆகாரத்தை புசிப்பதற்காக எகிப்திலிருந்த வெள்ளைப் பூண்டு பானைகளை விட்டு விட்டனர். அவர்கள் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து தண்ணீர் குடிக்கும்படியாக எகிப்திலிருந்த சேற்று- சேற்றுத் தண்ணீரை விட்டு விட்டனர். ஆமென். உங்களுக்கு அது புரிகிறதா-? அவர்கள் எகிப்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு, பிரயாணம் பண்ணிப் புறப்பட்டுப் போக விடுங்கள். 16. அவர்கள் தண்ணீரினூடாக வந்த போது, மேசேக்கு உள்ளாகவும், தேவனுக்கு உள்ளாகவும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவர்கள் செங்கடலைக் கடந்த போது, கொஞ்ச காலம் சந்தோஷமாய் இருந்தார்கள். மிரியாம் மிகவும் எழுப்புதலடைந்து, தம்புருவை எடுத்து, அதை அடித்து நடனமாடத் தொடங்கினாள். இஸ்ரவேல் குமாரத்திகளும் கூட எழுப்புதல் அடைந்தனர், இன்றைக்கு அவ்வாறு தான் அதைக் குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் தம்புருவை அடித்து நடனமாடத் துவங்கினர். அவர்கள் எதைக் குறித்து நடனமாடத் துவங்கினார்கள்-? அந்த எழுப்புதல் எதைப் பற்றியது-? ஏனென்றால் ஒரு காலத்தில் அவர்களை வேலை வாங்கிய அந்த எகிப்தியர்கள் யாவரும் இனி மேலும் அவர்களுக்குத் தொல்லைக் கொடுக்காதபடி, சிவந்த சமுத்திரத்தில் மாண்டு போனதை அவர்கள் நோக்கிப் பார்த்தார்கள். நான் மிரியாமைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறேன், இன்றிரவு உங்களுக்குக் கொஞ்சம் வேடிக்கையான உணர்வு உண்டாயிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை, சீட்டுக்கட்டு விருந்துகளிலும், இவ்வுலகத்தின் சமுதாய விவகாரங்களிலும் கலந்து கொள்ளும்படி வழக்கமாக உங்களை விரட்டுகிற அப்பழைய காரியங்கள் மரித்து விட்டதை நீங்கள் காணும் போது. நீங்கள் இனி மேலும் அவைகளை விரும்புவதில்லை. நீங்கள் சிவந்த சமுத்திரம் வழியாக கடந்து சென்று விட்டீர்கள், உங்கள் மேல் முழுவதுமாக இரத்த அணுக்கள் தெளிக்கப்பட்டு, உங்களுக்கு நோய்த் தடுப்பூசி போடப்பட்டு விட்டது (ஆமென்.), அதே சமயத்தில் ஈரமும் கூட உங்களை விட்டு நீக்கப்பட்டு விட்டது. ஆமென். அது உண்மை. உலகம் யாவும் உங்களை விட்டு நீக்கப்பட்டு விட்டது, DT, DDT போன்ற தடுப்பு மருந்துகள் உங்கள் மேல் தெளிக்கப்பட்டு விட்டன, அவர்கள் அதை அவ்வாறு தான் அழைக்கிறார்கள் என்று நம்புகிறேன். அது எல்லா பூச்சிகளையும் வெளியே தள்ளி விட்டது. மேலும் நீங்கள் தேவனுடைய DDT தடுப்பு மருந்து வழியாக வருகிற போது, அது எல்லா உலகத்தையும் உங்களை விட்டு வெளியே எடுத்துப் போட்டு விடுகிறது, அதற்கு பின்னால் இருக்கிற அந்த ஒட்டுண்ணிகள் எல்லாவற்றையும் அது கொன்று விடுகிறது. அது தான் இன்றைய சபையோடுள்ள காரியமாகும்: அவர்கள் அந்த தெளிக்கப்படுதலின் வழியாக வர விரும்புவதில்லை. நீங்கள் உங்களோடு ஒரு சில காரியங்களையும் கூடவே கொண்டு வர விரும்புகிறீர்கள். கட்டவிழ்த்து விடுங்கள்; அவைகள் போய் விடட்டும். அந்த கடினமான வழியாகிய தெளிக்கப்படுதலினூடாகச் செல்லுங்கள். உங்களை நீங்களே வேறு பிரித்துக் கொள்ளுங்கள், அது உங்களைச் சுற்றி இருக்கிற யாவற்றையும் மூச்சு முட்டச் செய்து கொன்று போடும். ஆமென். 17. இதோ அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் வழியாக வருகிறார்கள். அதன் பிறகு அவர்கள் உண்மையாகவே அதனூடாக, அங்கே பின்னாலிருந்த DDT தடுப்பு மருந்து வழியாக, அவர்கள் வெளியே வந்து விட்டதைக் கண்டபோது, நாம் அந்த ஒட்டுண்ணிகளைக் கண்டோம். அது ஆழத்தில் மடிந்து போனது என்று நம்புகிறேன். ஆனால் அந்த ஒட்டுண்ணிகள் அவ்வாறு செய்ய முயற்சித்த போது, தண்ணீரில் முழ்கி மடிந்து போயின. கிறிஸ்தவத்தை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்கிற இந்த ஜனங்கள் உலகத்தாரைப் போல ஜீவித்து, அவர்கள் போகக் கூடாத எல்லாவிதமான இடங்களுக்கும் சுற்றித் திரிந்து, சபையை சேர்ந்து கொண்டு, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள், தேவன் தமது DDT தடுப்பு மருந்தை இன்று தெளித்துக் கொண்டு, தமது ஜனத்தை வேறு பிரித்து, வெளியே அழைத்து, அவர்களை பரிசுத்த ஆவியால் நிறைத்து, அவர்களைப் பிரிக்கிறார். உலகமானது பிரிக்கப் - உலகமானது ஒன்றாகக் கலந்திருப்பவர்களை (mixers) விரும்புகிறது என்று உங்களுக்குத் தெரியும். தேவன், ‘பவுலையும் பர்னபாவையும் எனக்காகப் பிரித்து விடுங்கள்’ என்று கூறினார். தேவன் வேறு பிரிப்பவர்களை (separators) விரும்புகிறார். உலக காரியங்களை விட்டு உங்களை நீங்களே பிரித்துக் கொள்ளுங்கள், அப்பொழுது கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொள்வார். 18. கவனியுங்கள். இதோ அவர்கள் வெளியே வந்து, தங்கள் பிரயாணத்தில் இருக்கிறார்கள். மோசே மிக நல்ல உணர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும், ஆவியானவர் அவன் மேல் வந்தார், அவன் எழுந்து, தேவன் எவ்வாறு பார்வோனைக் கவிழ்த்துப் போட்டார் என்பதைக் குறித்தும், அவனுடைய குதிரை வீரரும், அவனுடைய இரதங்களும் எவ்வாறு கவிழ்க்கப்பட்டு போயிற்று என்பதைக் குறித்தும் ஆவியில் ஒரு பாட்டைப் பாடினான். பிறகு அவர்கள் பிரயாணத்திற்கு ஆயத்தமாயினர். அதே விதமாகத் தான் சபையும் உள்ளது, நீங்கள் ஒருவிசை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக வந்து, எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்கப்படும் போது, நீங்கள் பிரயாணத்திற்காக ஆயத்தமாகிறீர்கள். அப்போது நீங்கள் உங்களுடைய பாதையில் இருக்கிறீர்கள்; தொடர்ந்து யாத்திரை செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நிற்காமல் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தனர், அது சபைக்கு ஒரு முன்னடையாளமாயுள்ளது. ஆனால் பிறகு, அதை லூத்தரின் காலத்தோடு ஒப்பிடுவோமானால், அவர்கள் ஒரு இடத்திற்கு வந்தனர், இருப்பினும் அவர்கள் முழு சுவிசேஷத்தையும் கொண்டு இருக்கவில்லை, மேலும் அவர்கள் காதேஸ்பர்னேயா என்ற இடத்திற்கு வந்தனர். இப்பொழுது ஒரு மகத்தான நீரூற்றும், அதைச் சுற்றிலும் அநேக சிறிய நீரூற்றுகளும் இருந்த இடமாக காதேஸ்பர்னேயா இருந்தது, அது ஒரு காலத்தில் உலகத்தினுடைய நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருந்தது, நியாயத்தீர்ப்பிற்கு ஓர் அழகான முன்னடையாளம். மெய்யாகவே தேவனுடைய வீட்டில் நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. அங்கே அவர்கள் பாளையமிறங்கினார்கள். 19. இப்பொழுது, மோசே எகிப்தை விட்டுச் சென்ற ஒரு சில நாட்களில், தேவன், யோசுவாவிடம் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், மோசேயிடம், ‘இப்பொழுது, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒருவனாய் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்கள் புறப்பட்டுப் போய், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுற்றிப் பார்க்கும்படி, அவர்களை அங்கு அனுப்பு’ என்றார். ‘இப்பொழுது அத்தேசத்தை வேவு பார்க்கும்படி அவர்களை அனுப்பு. பிறகு அவர்கள் திரும்பி வந்து, எனக்கு அறிவிப்பார்களாக’ என்றார். அவர்கள் அந்த யோர்தான் ஆற்றைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போன போது, அவர்கள் அது வறுமையான தேசமா அல்லது நல்ல தேசமா என்றும், அது திராட்சைப் பழங்களுடைய தேசமா அல்லது அது கனிகள் உள்ள தேசமா என்றும் பார்க்கும்படி அத்தேசத்தை சுற்றிப் பார்க்கத் துவங்கினர். அவர்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது, மேலே ஏறிச்சென்று, ஒரு திராட்சைக் குலையை வெட்டி, அதை இரண்டு பேர் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள். என்னவொரு திராட்சைக் குலை. அது ஒரு சாபமான தேசமாக இருந்து, அதைப் போன்ற ஏதோ ஓன்றை விளையச் செய்யுமானால், சாபம் அதை விட்டு எடுபட்டு போகும் போது, அது எப்படிப்பட்ட கனிகளை விளையச் செய்யும்-? என்று நான் நினைக்கிறேன். 20. இதோ அவர்கள் திரும்பி வருகிறார்கள், ஆனால் அவர்கள் அத்தேசத்திற்குள் பார்த்த போது, எல்லா பெலிஸ்தியர்களையும், எமோரியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும் மற்றும் அந்த எல்லா மனிதர்களையும் கண்டார்கள், அவர்கள் (பட்டணங்கள்) அரணிப்பான வைகளாய் இருந்தன, அவர்கள் தங்களுடைய பெரிய தேசத்திலும் மற்றவைகளிலும் வசித்து வந்தார்கள், அதைப் பார்த்த அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அவர்கள் திரும்பி வந்து, ‘ஓ’ என்றார்கள். அவர்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, இஸ்ரவேல் புத்திரர் யாவரையும் வருவித்தார்கள், இப்பொழுது இது ஓர் அழகான முன்னடையாளம். அவர்கள் எழுந்து நின்று, ‘அந்த தேசம் அருமையாய் உள்ளது. அது அற்புதமாய் உள்ளது. நாம் அம்மாதிரியான ஓர் எழுப்புதலைக் கொண்டிருக்கக் கூடுமானால், அது நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது. அவ்வளவு தான்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள், ‘ஓ, நாம் அவர்களுக்கு இரையாக இருக்கிறோம். என்னே. நல்லது, அவர்கள் பெரியவர்கள். ஏன், அவர்கள் இராட்சதர்களும் மற்றவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் அரணிப்பான இடங்களில் இருக்கிறார்கள். அவர்களை ஜெயிக்க நம்மால் கூடாத காரியம். ஓ, நீங்கள் ஏன் எங்களை எங்கள் சபைகளை விட்டு இம்மாதிரியான ஒரு தேசத்திற்குள் கொண்டு வந்தீர்கள்-?’ என்றனர். 21. நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன்... சற்று முன்பு இது என் சிந்தையில் வந்தது. மோசே அந்த பத்து வேவுகாரர்களை அனுப்பின போது, அது திராட்சைப் பழ அறுவடை காலமாய் இருந்தது: முதற் கனிகளாகிய பெந்தெகோஸ்தேயினரைப் பற்றிய பரிபூரண முன்னடையாளம். பெந்தெகோஸ்தேயினர் ஒன்று கூடினார்கள், முதலாம் அறுவடை. மேலும் அவர்கள் காதேஸ்பர்னேயாவில், நியாயத்தீர்ப்பில் இருந்த போது, அவர்கள் தொடர்ந்து போய், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் (அங்கு தான் அவர்கள் வாக்குத் தத்தத்தைக் கொண்டிருந்தனர்) பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதை அது தீர்மானித்தது. நீங்கள், ‘அது ஒரு வாக்குத் தத்தமா-?’ என்று கேட்கலாம். ஆமாம், பேதுரு, ‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும், சிகாகோவில் உள்ளவர்களுக்கும் கூட உண்டாயிருக்கிறது’ என்றான். இன்று, ‘இது அதிக கடினமானது, நம்மால் இதைச் செய்ய முடியாது’ என்று கூறுகிற மிக அதிக ஜனங்களை நாம் கொண்டிருக்கிறோம். நம்மால் கூடும். அறுவடையின் நேரம்... அக்காரணத்தினால் தான் அவர்கள் இப்பெரிய திராட்சைக் குலையை வெட்டியெடுத்து, ஒரு அத்தாட்சிக்காக திரும்ப கொண்டு வந்தார்கள். காலேபும் யோசுவாவும் அக்குலையை தங்கள் தோள்களில் சுமந்தவாறு, யூபிலி பாட்டைப் பாடிக் கொண்டு, அணிவகுத்து நடந்து வந்து கொண்டிருந்தனர். நிச்சயமாக, அவர்களிடம் அத்தாட்சி இருந்தது. அது ஒரு நல்ல தேசம் என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தது. அவர்கள் திரும்பி வரும் போது அதைக் கொண்டு வந்து, அவர்கள் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரு திராட்சைப் பழத்தைக் கொடுத்தனர். அந்த ஒரு குலை திராட்சைப் பழங்களிலிருந்து ஒரு பழத்தை யார் விரும்பினார்களோ, அவர்களுக்கு அதைக் கொடுத்தனர். எப்படிப்பட்ட ஒரு திராட்சைக் குலை அவர்களிடம் இருந்தது என்று பாருங்கள். 22. இப்பொழுது, ஜனங்கள், ‘ஓ, அதைச் செய்ய முடியாது, அதைச் செய்யவே முடியாது’ என்று கூறுகிற இந்த முணுமுணுப்புகளை எல்லாம் யோசுவாவும் காலேபும் கேட்ட போது, காலேப் அந்த ஜனங்களிடையே ஓடிச்சென்று, அவர்களை அமைதிபடுத்தி, ‘ஆம், அதை நம்மால் செய்ய முடியும்’ என்றான். யோசுவா அவனுடைய பக்கத்தில் நின்று, ‘நிச்சயமாகவே, நம்மால் அதைச் செய்ய முடியும். தேவன் நமக்கு அதைக் கொடுத்து விட்டார்’ என்றான். ஆமென். எனக்கு அது பிடிக்கும். அது என்னவாக இருந்தது-? அவர்கள் கிறிஸ்துவுக்குள் தங்கள் ஸ்தானத்தில் பிறந்திருந்தனர். அவர்களுக்கு வார்த்தையைக் குறித்த அறிவு இருந்தது, வார்த்தையானது வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. அந்த இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் தங்களுக்குப் போதிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் அவையெல்லாம் எதைப் பற்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படியாக காலேப் மேலும் யோசுவாவின் மேலும் மாத்திரமே அது விளைவை ஏற்படுத்தினது. அவர்கள், ‘ஓ, நம்மால் அதைச் செய்ய முடியாது’ என்றனர். அப்போது ஜனங்கள் அழுது முறையிடத் தொடங்கி, ‘ஓ, ஏன் எங்களை வெளியே கொண்டு வந்தீர்கள்-? நாங்கள் மரித்திருக்க வேண்டும். இப்பொழுது நம்முடைய சிறு பிள்ளைகளும் மற்றவர்களும் கொல்லப்படப் போகின்றனர். நாம் அங்கே போகிறோம், ஒரே காரியம் என்னவெனில், நாமும் அங்கே சென்று அவர்களோடு ஈவு இரக்கமின்றி கொல்லப்படப் போகிறோம். அவ்வளவு தான், அது அவ்வாறு தான் நடக்கப் போகிறது’ என்றனர். அவர்கள் இன்றைக்கும் அவ்விதமாகத்தான் கூறுகிறார்கள், அவர்கள், ‘ஓ, இங்கேயுள்ள இந்த முழு சுவிசேஷ செய்தியை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது; தெய்வீக சுகமளித்தலை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்கின்றனர். இந்த மகத்தான பெரிய அமைப்புகளும் ஸ்தாபனங்களும் மற்றவைகளும், தங்களுடைய அங்கத்தினர்களில் ஒருவர் தெய்வீக சுகமளித்தரில் விசுவாசம் வைத்து, சுகமடையட்டும், அவர்கள் இவர்களை வெளியே தள்ளி விடுவார்கள். நீங்கள் என்னிடம் கூற வேண்டாம், நான் - நான் அதை அறிவேன். 23. ஒரு விதவைக்கு உதவி செய்கிற, ஒரு ஸ்தாபனத்தைக் குறித்து நான் அறிவேன், அது இங்கு இருந்து வெகு தூரத்தில் இல்லை. அவள் யூதர்களுக்கு ஒரு மிஷனரியாக இருந்தாள். அந்த ஸ்திரீக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த மகள் மருத்துவமனையில் (அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு), சுய நினைவற்றவளாய், கடுமையான சிறுநீரக வியாதியின் (uremic poisoning) காரணமாக மரணத் தருவாயில் படுத்திருந்தாள். அவள் ஒரு கத்தோலிக்கப் பையனை விவாகம் பண்ணி இருந்தாள். அந்த பையன் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்தான். அவனுடைய குழந்தை, முதலில் பிறந்திருந்த அவனுடைய குழந்தைகளில் ஒன்று சுகமடைந்திருந்தது. இவ்விதமிருக்க, நான் அச்சமயத்தில் பட்டணத்திற்கு வெளியே இருந்தேன். நான் பட்டணத்தினுள்ளே வந்த போது, நான் சென்று, அந்த ஸ்திரீக்காக ஜெபிக்க முடியுமா என்று கேட்டார்கள். நல்லது, நான் அங்கே போனேன், அங்கே ஒரு பாதிரியார் நின்று கொண்டிருந்தார். அவளுடைய மாமியார் பாதிரியாரை அழைத்துக் கொண்டு வந்து அங்கே நிற்க வைத்தார்கள். எனவே அவர்கள் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தனர்: அவர்களில் ஒருவர் புரட்டஸ்டண்ட்டாகவும், மற்றவர் கத்தோலிக்கராகவும் இருந்த காரணத்தால், ஒருவர் மற்றவரோடு வம்பு பேசி குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், ‘நல்லது...’ என்றார். அங்கே பாதிரியாரை அழைத்துக் கொண்டு வந்திருந்த தாயார், ‘நல்லது, இது என்னுடைய பேரப்பிள்ளை, இந்த பாட்டி நரகத்திற்குப் போக நான் விரும்பவில்லை. பாதிரியார் உள்ளே சென்று, அவளுடைய மரணத்திற்காக அவளுக்கு எண்ணெய் பூசும்படி நான் விரும்புகிறேன்’ என்றாள். 24. நல்லது, ஏறக்குறைய அச்சமயத்தில், நான் அங்கே மேலே நடந்து சென்றேன், மருத்துவரும் அங்கே இருந்தார். இதோ நான் அவள் ஜீவிப்பதற்காக எண்ணெய் பூசி ஜெபிக்கும்படி போனேன், அவரோ அவளுடைய மரணத்திற்காக எண்ணெய் பூச வந்திருந்தார், மேலும் எங்கள் இருவரையுமே சவுக்கடியால் அடித்து விரட்டும்படி மருத்துவரும் அங்கே தயாராக நின்றிருந்தார் என்று யூகிக்கிறேன். என்னவொரு காட்சி. நான், ‘இப்பொழுது, அவர், அவளுடைய மரணத்திற்காக எண்ணெய் பூச வந்திருந்தால், நான் அவள் ஜீவிப்பதற்காக எண்ணெய் பூசி ஜெபிக்க வந்திருப்பதால், பிரயோஜனம் என்ன-? நாம் இங்கே எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு இருக்கிறோம்’ என்றேன். ‘நல்லது,’ அவர், ‘பாட்டி - இரண்டு பாட்டிமார்களும் சண்டைபோட்டுக் கொண்டு இருக்கின்றனர்’ என்றார். நான், ‘நல்லது... நீர் அதைக் குறித்து தகப்பனையே தீர்மானம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றேன். தகப்பன், ‘நல்லது...’ என்றான். அவன் ஒரு கத்தோலிக்க பையனாய் இருந்தான். அவன், ‘இதோ பாருங்கள். சங்கை பிரான்ஹாம் என் குழந்தைக்காக ஜெபிப்பார்’ என்றான். மேலும் தொடர்ந்து, ‘அவர் உள்ளே சென்று, குழந்தைக்காக ஜெபிப்பார் என்று நம்புகிறேன்... அவர் உள்ளே போகலாம் என்று நான் சொல்லுகிறேன்’ என்றான். எனவே அவர்களெல்லாரும் பின்னால் விலகிப் போய் விட்டனர். மருத்துவர் என்னை அறைக்குள் விட்டார். அந்த பையனும் என்னுடன் உள்ளே வந்தான். அந்த ஸ்திரீயோ சுயநினைவற்றிருந்தாள். நான் ஜெபிக்கும்படி முழங்கால் படியிட்டேன். நான் அங்கே நின்று ஜெபித்துக் கொண்டிருந்த போது, நீங்களோ அல்லது வேறு யாரோ ஜெபிப்பது போன்று அந்த பையன் தாழ்மையாக ஜெபித்துக் கொண்டிருந்தான், அப்பொழுது யாரோ ஒருவர் கதவைத் தட்டினார், வெளியே போய் அவர்களிடம் பேசும்படி அவன் கதவண்டை போனான்; அங்கே வேறு யாரோ ஒருவர் வந்திருந்தார். வேறொரு மருத்துவர் அல்லது யாரோ ஒருவருடைய மருத்துவ ஆலோசனையை (consultation) பெறுவதற்கு அவர்கள் விரும்பினர். அவள் மரித்து விடுவாள் என்று அவர்கள் அவளைக் கைவிட்டு விட்டனர், ஆகையால் அவர்கள் ஏதோவொன்றைச் செய்யப் போவதாக இருந்தனர். அந்த பையன் வெளியே போயிருந்தான். 25. நான் ஏறக்குறைய பத்து நிமிடங்கள் ஜெபித்தேன். நான் எழுந்து, ‘கர்த்தாவே, அந்த சிறு வயது தாயார் மரித்துப்போக விடாதேயும்’ என்று ஜெபித்தேன். நல்லது, நான் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த தரையை விட்டு எழுந்தேன். நான் எழுந்து, ஒருவிதமாக என் கண்களைத் துடைத்து விட்டு, (நான் சிறிது அழுதிருந்தேன்), சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கத் துவங்கினேன், அப்பொழுது அந்த ஸ்திரீ வீட்டில் இருந்து கொண்டே தன்னுடைய குழந்தையைக் கவனித்தவாறு, இவ்விதமாக, ‘ஸ்’ என்று கூறுவதைக் கண்டேன். மேலும் அவள் இவ்விதமாக சுற்றிலுமுள்ள காரியங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள், அவள் உணவை (dinner) ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். நான் அவளை சிறிது நேரம் கவனித்தேன். என்னே, என்னவொரு உணர்ச்சி. அந்த தரிசனம் கலைந்து விட்டது. நான் ஒருவிதமான புன்சிரிப்போடு கதவண்டை நடந்து சென்றேன், நான் மேலே அணிந்திருந்த கோட்டை (overcoat) என் கைகளில் பிடித்துக் கொண்டு வெளியே போனேன். அங்கே தகப்பனாரும், பாதிரியாரும், அவர்கள் எல்லாரும் வெளியே நின்று கொண்டிருந்தனர், சரியாகச் சொன்னால் மருத்துவரும், அவர்கள் யாவரும் அங்கே வெளியே நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நடந்து சென்றேன், அவளுடைய கணவன், ‘சங்கை பிரன்ஹாம் அவர்களே, ஏதாவது செய்தி உண்டா-?’ என்று கேட்டார். நான், ‘ஆம், ஐயா. நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை வைத்திருக்கிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது: உன்னுடைய மனைவி சுகமாகி வீட்டிற்குப் போகப் போகிறாள்’ என்றேன். நான் மேலும் தொடர்ந்து, ‘இப்பொழுது, இந்த இரவு கழிவதற்கு முன்பு அவள் மோசமான நிலையை அடைவாள். அவர்கள் அவள் மேல் மூச்சுவிட ஏதுவான கருவி (Pulmotor) ஒன்றை அவளுக்குப் பொருத்தப் போகின்றனர், ஏனென்றால் அவள் மூச்சுவிடுவது மிகக் குறைவாகவே இருக்கப் போகிறது’ என்றேன். ஆனால் நான், ‘அதற்குப் பிறகு, அவள் அதை விட்டு வெளியே வருவாள். நாளை இரவு இந்த நேரத்தில், உன்னுடைய மனைவி வீட்டில் இருப்பாள், அது கர்த்தர் உரைக்கிறதாவது’ என்றேன். 26.அந்த ஜனங்கள் களிகூரத் துவங்கினர் - அவன் களிகூரத் துவங்கினான். அந்த பாதிரியார் தலையை அசைத்து விட்டு, மருத்துவரை நோக்கிப் பார்த்தார், மருத்துவரும் நோக்கிப் பார்த்து, தம்முடைய தலையை அசைத்து விட்டு, கீழே நடந்து போய் விட்டார், அவர் பித்து பிடித்தவரைப் போன்று போய் விட்டார். எனவே நான் அவர்கள் கடந்து போகிறவரையில் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த பையனுடைய தகப்பனார் மேலே வந்து, ‘இதோ பார், மகனே, இந்த அர்த்தமற்ற காரியத்தை நாம் பெற்றிருப்பது போதாதா-?’ என்றார். அவன் அவரிடம், ‘கவனியுங்கள் அப்பா, நான் என்னுடைய குழந்தையை - என்னுடைய முதலாவது குழந்தையை சகோதரன் பிரன்ஹாமிடம் கொண்டு சென்றேன் (அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும்), அவர் அதற்காக குறைந்தது நான்கு அல்லது ஐந்து தடவைகள் ஜெபித்தார். நான் அதை அங்கு கொண்டு சென்றேன், (ஆனால்) அது சுகமடையவே இல்லை’ என்றான். அந்த குழந்தையானது காரில் ஏற்பட்ட பிறவிக் குறைபாட்டால் (clubbed feet) பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவன், ‘ஒரு நாள் வேறு யாரோ ஒருவரோடு நான் அங்கு சென்று, அந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, அப்பொழுதிலிருந்து 24 மணி நேரத்தில் என்னுடைய குழந்தையின் கால் நேராகி விடும் என்று சகோதரர் பிரன்ஹாம் என்னிடம் கூறினார். அடுத்த நாள் காலையில் என்னுடைய மனைவியும் நானும் ஒரே நேரத்தில் துள்ளிக் குதித்து, குழந்தையின் தொட்டில் அண்டையில் ஓடிச் சென்றோம். இரண்டு கால்களுமே எவ்வளவு பரிபூரணமாக சுகமாயிருக்க முடியுமோ அவ்வளவு பரிபூரணமாக சுகமாகியிருந்தன. சகோதரன் பிரன்ஹாம் ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்று கூறினால், என் மனைவி 24 மணி நேரத்தில் வீட்டிற்குப் போகப் போகிறாள், குட்பை, அவளை வீட்டிற்கு கொண்டு போகும்படி, வீட்டை ஒழுங்குபடுத்த நான் வீட்டிற்குப் போகப் போகிறேன்’ என்றான். அது உண்மை. அவன் அங்கிருந்து போய், வீட்டை ஒழுங்கு படுத்தினான்; 24 மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தாள், அது முதற் கொண்டு அவள் எப்பொழுதும் வீட்டிலே இருந்து வருகிறாள். அது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த காரியம். மேலும் இந்த ஸ்திரீ, அந்த பாட்டியார்... நல்லது, அது அக்குழந்தையின் பாட்டியாக இருந்தது, அப்பெண்ணின் தாயார், யூத ஜனங்களுக்கு உதவி செய்யும்படியாக ஒவ்வொரு மாதமும் அதிகமான பணத்தை அவளுக்கு அனுப்பிக் கொண்டிருந்த அந்த ஸ்தாபனத்திடம் அவள் அதைக் கூறின போது, அவள் தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக் கொண்டு, அதைக் கண்கூடாகக் கண்ட காரணத்தினால், அவளுக்கு செய்து கொண்டிருந்த அந்த உதவியை அவர்கள் நிறுத்திக் விட்டு, ‘நாங்கள்... நாங்கள் சகோதரன் பிரன்ஹாமை அவமதிக்கவில்லை; அம்மனிதருக்க விரோதமாக எங்களுக்கு எதுவும் கிடையாது, ஆனால் எங்கள் திட்டத்தில் தெய்வீக சுகமளித்தலை கொண்டு வந்து குழப்பிக் கொள்ள முடியாது’ என்றனர். நல்லது, அப்படியானால் நீங்கள் தேவனுடைய திட்டத்திற்கு வெளியே இருக்கிறீர்கள்...-?... நான் அறிந்து உள்ளவரையில், நான் உலகத்திற்கு சற்றே ஒரு மதவெறியனாய் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கிறேன். ஆம், ஐயா. அது சரியே. தேவன் தாம் செய்கிற காரியங்களையும், செய்கைகளையும் அற்புத அடையாளங்கள் செய்வதின் மூலமாக உண்மை என மெய்ப்பித்து, நிரூபிக்கிறார்... அவர் எப்போதுமே அதை செய்கிறார், அவர் எப்போதும் அவ்வாறே செய்வார். அங்கே ஒரு உலகம் உள்ள காலம் வரை, காரியங்களை கட்டுப்படுத்தி ஆளுகை செய்ய இங்கே இயற்கைக்கு மேம்பட்ட தேவன் ஒருவர் இருப்பார். தேவன் தம்முடைய கரங்களை வைக்கத்தக்க யாரோ ஒருவரை எப்போதுமே கொண்டிருப்பார். 28. இன்றிரவு உலக முழுவதிலும் தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு சபை அவருக்குண்டு. சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அதைப் பற்றிய அநேக காரியங்கள் அவருக்குண்டு. என்னால் அவைகளுக்குத் தீர்வு காண முடியாது, என்னால் அவைகளைத் தீர்க்கவே முடியவில்லை. அவைகளுக்கு எவ்வாறு தீர்வு காணுவது என்று எனக்குத் தெரியவில்லை; வேறு எந்த மனிதனாலும் அதற்கு தீர்வு காண முடியாது. ஆனால் அதைச் செய்வது தேவனுடைய வேலையாகும். அவர் அதைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வார். அதைச் செய்வது மனிதக் கரங்களில் கிடையாது. நாம் மனிதனால் உண்டாக்கப்பட்ட எத்தனை திட்டங்களைக் துவங்கினாலும் காரியமில்லை, நீங்கள் அவைகளைத் துவங்குவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவைகள் ஒவ்வொன்றும் விழுந்து போகும். ஆனால் தேவன் தாமே தம்முடைய திட்டங்களை நிலைநாட்டுவார். அவருடைய திட்டமே இயேசு கிறிஸ்து தான். நான் அறிந்துள்ள வரையில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டு, ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்பது தான் அவருடைய திட்டமாகும். 29. தேவன் சிவந்த சமுத்திரத்தை பிளக்க முடிந்ததை யோசுவா கண்டபிறகு, அவன், ‘அது எனக்கு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தேவன் சிவந்த சமுத்திரத்தை திறந்து விட்டாரே’ என்றான். அவர்கள் எகிப்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு, கர்த்தர் பெரிய அக்கினி ஸ்தம்ப வடிவில் மோசேயின் மேலும், அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் மேலும் சுழன்று கொண்டே, அவர், ‘வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிரு, அவரைக் கோபப்படுத்தாதே; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது’ என்றார். உங்களால் அதைக் காண முடிகிறதா-? நிச்சயமாக, அது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவே. ‘என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.’ உருவின பட்டயத்தைப் பிடித்திருந்த ஒரு மனிதனைப் போன்று தான் யோசுவா அவரை அங்கே கண்டான். நாமோ இன்று அவரை பாவத்துக்கான ஒரு பாவ பரிகாரமாக காண்கிறோம், அதன் பிறகு இம்மானுவேல் உயிர்த்தெழுந்து, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து, நமக்காக வேண்டுதல் செய்து கொண்டு இருக்கிறார், மேலும் அவர் நமக்காக செய்துள்ள எதையும் நாம் அறிக்கையிடும் போது, அவர் அவைகளை நடப்பித்துக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா. 30. இது கடினமாகவும், அதி தீவிர மூடபக்தி வைராக்கியம் போன்றும் ஒலிக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் அநேக ஜனங்கள் அதிதீவிர மூடபக்தி வைராக்கியத்தைக் குறித்து மிகவும் பயப்படுகின்றனர், அப்பொழுது நீங்கள் உண்மையான காரியத்தை இழந்து விடுகிறீர்கள். நல்ல ஆப்பிள் மரத்தைச் சுற்றிலும் எப்போதுமே சோளக்கொல்லை பொம்மைகள் வைத்திருப்பதைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா-? அங்கே அநேக சோளக்கொல்லை பொம்மைகள் இருப்பதில்லை... சோளக்கொல்லை பொம்மை என்பது என்ன-? உங்களை உண்மையான காரியத்தை விட்டு விலக்கி வைக்கும் பொருட்டு உங்களை பயமுறத்துகிற ஒன்று தான் அது. அதைச் சுற்றிலும், நிற்காமல் தொடர்ந்து செல்லுங்கள். அதற்கு பின்னால் ஒரு உண்மையான அசலான பரிசுத்த ஆவி உள்ளது, அதற்குப் பின்னால் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட விசுவாசிகள் உள்ளனர். அடையாளங்களும், அற்புதங்களும், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட தேவனின் நிரூபணங்களும், பாளையத்திலிருந்த இராஜாவும் தான் இஸ்ரவேலருக்கும் மோவாபியருக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணினது. அது தான் வித்தியாசம். காயீனுக்கும் ஆபேலுக்கும் இடையிலிருந்த வித்தியாசம் அதுவே. காயீன் ஒரு நல்ல மனிதன், ஆபேலும் அவ்வாறே நல்ல மனிதன் தான். காயீன் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்த ஒரு மனிதனாக இருந்தான், ஆபேலும் அவ்வாறே இருந்தான். ஆனால் அது கனிகளல்ல, இரத்தம் தான் என்று அறிகிற ஆவிக்குரிய வெளிப்பாட்டை ஆபேல் கொண்டிருந்தான். அவன் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், தேவன் அதை ஏற்றுக் கொண்டார். 31. இங்கே கவனியுங்கள். சகோதரனே, மேவாப் எவ்வளவு அடிப்படைவாதிகளாக இருக்க முடியுமோ அவ்வளவு அடிப்படைவாதிகளாக வருகிறார்கள். வேத வாக்கியம் போதிக்கிற ஒவ்வொரு அடிப்படை உபதேசமும் அவனிடம் இருந்தது. அவன் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு பலிகளை செலுத்தினான், இஸ்ரவேலர் பலியிட்டது போன்றே ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கடாக்களையும் பலியாகச் செலுத்தினான்: எழு பலிபீடம், ஏழு காளைகள், ஏழு ஆட்டுக்கடாக்கள், அவை கர்த்தராகிய இயேசுவினுடைய வருகையின் அடையாள அர்த்தங்களாக உள்ளன, இங்கே எவ்வளவு அடிப்படை ரீதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அடிப்படை ரீதியாக அவர்கள் அங்கே இருந்தார்கள். நல்லது, நீங்கள் அடிப்படைவாதிகளாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தேவனுடைய எதிர்பார்பார்ப்பாய் இருக்குமானால், அவர் மோவாபை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, இஸ்ரவேலரை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. அது அநீதியாய் இருந்திருக்கும். ஆபேல் எவ்வளவு அடிப்படைவாதியாக இருந்தானோ அவ்வளவு அடிப்படைவாதியாய் காயீனும் இருந்தான். அவன் ஒரு விசுவாசியாய் இருந்து, ஒரு சபையைக் கட்டி, ஆராதித்து, பலிசெலுத்தி, தேவனுக்கு முன்பாக தன்னைத் தான் தாழ்த்தினான். அது மாத்திரமே ஒரு விசுவாசியாய் இருப்பதற்கு தேவைப்படுமானால்... நீங்கள், ‘நல்லது, நான் ஒரு விசுவாசி’ என்று கூறலாம். நல்லது, தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு ஒருபோதும் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் விசுவாசியாயில்லை. அது உண்மை. தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். அவர், ‘நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ என்று கூறின போது, தேவன் அதைச் செய்யக் கடமைப்பட்டுள்ளார். யாருக்கு அதைச் செய்வார்-? அப்போஸ்தலருக்கா-? இல்லை, ஐயா. பேதுரு, ‘உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது’ என்றான். அது எவ்வளவு தூரமாயிருந்தாலும் பரவாயில்லை, அது ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் உரியது. ஓ, வேத சாஸ்திரிகள் அதற்கு மேலாக சாந்து பூசலாம், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. அவள் இப்பொழுது எல்லாவிடங்களிலும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறாள். ஆமென். நான் கர்த்தராகிய இயேசுவுக்காகவும், அவருடைய ஜனத்திற்காகவும் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நான் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்-? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் என்னவாய் இருக்கிறீர்கள் என்பதையும் காணும்படி செய்யவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மாத்திரம் உங்கள் கண்களைத் திறந்து, நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அதோ அங்கிருக்கிற அவ்விடத்தில் நோக்கிப் பார்ப்பீர்களானால், ஏன், கோடை காலத்தில் சூடான அடுப்பிலிருக்கிற ஒரு பனிக்கட்டியைப் போல வியாதியானது உங்களை விட்டு உருகிப் போய் விடும், வியாதிகளும், மற்றவைகளும் உருகிப் போய் விடும், ஏனென்றால் கிறிஸ்து அதை வாக்குத் தத்தம் பண்ணியுள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தமாய் உள்ளது. 32. இப்பொழுது, இந்த தூதனானவர் அக்கினிஸ்தம்ப அடையாளத்தில் அவர்கள் மேல் சுழன்று வந்த நேரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது இரவு நேரத்தில் அவ்வாறு இருந்தது. பகல் நேரத்தில் அவர்கள் மேல் சுழன்று வருகிற ஒரு வெள்ளை மேகத்தைப் போல அது காணப்பட்டது. மேலும் அவர்கள் இதற்கு கீழே இருந்த போது, அவர், ‘இப்பொழுது, நான் உனக்கு முன்னே அவனை அனுப்பப் போகிறேன். இப்பொழுது, பாலஸ்தீனாவை உனக்குக் கொடுத்து விட்டேன். அதிலுள்ள எல்லாமே உன்னுடையது; வெறுமனே போய் அதை சுதந்தரித்துக் கொள். நீ செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான்’ என்றார். நல்லது, இதோ அவர்கள் போகத் துவங்குகிறார்கள், அவர்கள் போகையில், தேவன் அவர்களை ஆசீர்வதித்து, மகாபெரிய சந்தோஷத்தையும், மகா பெரிய எழுப்புதலையும் மற்றவைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர்கள் அங்கே மேலே வருகிறார்கள், அங்கே எல்லா இடங்களிலும் மகா பெரிய எதிர்ப்பு இருக்கிறதை அவர்கள் கண்ட காரணத்தினால், அவர்கள் பயந்தனர். தேவனோ, ‘நான் எவ்வளவு காலம் உங்களாலே வருத்தப்படுவேன்-? மோசே, வழியை விட்டு விலகு, நான் அவர்கள் யாவரையும் கொன்று போடுவேன். நான் இதைச் செய்த பிறகு...’ என்றார். அது இன்றைக்குள்ள பெந்தெகோஸ்தே சபையினுடைய ஒரு காட்சியாக இல்லையா என்று பாருங்கள். அவர், ‘நான் அவர்கள் முன்பாக அநேக அற்புதங்களை நடப்பித்து, அவிசுவாசிகள் முன்பாக அவைகளைக் காண்பித்து, அவர்களை அழைத்திருக்கிறேன். நான் இந்த அற்புதங்களை நடப்பித்த போதிலும், இன்னும் அவர்கள் என்னை விசுவாசிக்க மாட்டார்கள்’ என்றார். சபைக்கு என்னவொரு - என்னவொரு கடிந்து கொள்ளுதல். ‘அநேக காரியங்களை நான் செய்திருக்கிறேன்; நான் அற்புதங்களை நடப்பித்து இருக்கிறேன்; தேசம் முழுவதும் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், இருப்பினும் அவர்கள் என்னை விசுவாசிக்க மாட்டார்கள். நான் அவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்து, உடன்படிக்கைக்குள்ளாக அவர்களைக் கொண்டு வந்தேன்.’ அவர் இஸ்ரவேலருக்கு அதை செய்தாரா-? நிச்சயமாக, சிவந்த சமுத்திரத்தினூடாக (ஞானஸ்நானம்) அவர்களை வழிநடத்தி, அதற்கு வெளியே அவர்களைக் கொண்டு வந்து, அவர்களுக்கு சந்தோஷத்தையும் களிப்பையும் கொடுத்து, அற்புதங்களை நடப்பித்து, அவர்களைப் போஷித்தார். அப்பொழுதும் அவர்கள் அவிசுவாசித்தார்கள். அவர், ‘இதற்கும் கொஞ்சம் அப்பால் அங்கே ஏதோ ஓன்றுள்ளது’ என்றார். ‘ஓ, நாம் சபையை சேர்ந்து கொள்வதில் திருப்தியடைந்து இருக்கிறோம். நாம் சபைக்கு போகும் காலம் வரை, அதெல்லாம் சரி தான் என்று நான் நினைக்கிறேன்’ என்று எண்ணுகிறார்கள். 33. இதோ யோசுவாவும் காலேபும் திரும்பி வந்து, ‘தேசம் உண்மையாக உள்ளது. இதோ அத்தாட்சி’ என்றனர். தேவனுக்கு ஸ்தோத்திரம். ‘தேவனுடைய வாக்குத்தத்தம் உண்மை என்பதற்கு இதோ அத்தாட்சி உள்ளது. அதை நிரூபிப்பதற்கு இதோ நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது.’ அவர்கள் ‘நல்லது’ என்றனர், மற்றவர்களோ, ‘உங்களால் அதைச் செய்ய முடியாது. உங்களால் அதைச் செய்யவே முடியாது. மிக அதிகமான அதிதீவிர மூடபக்தி வைராக்கியங்கள் அதனோடு கலந்துள்ளன, அதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நம்மால் கொஞ்சமும் முடியாது,... நீங்கள் அவ்வாறு செய்தால், நம்முடைய சபைகள் அனைத்தையும் உடைத்துப் போடப் போகிறீர்கள். நாம் இதைத்தான் செய்யப் போகிறோம்...’ என்றனர். என்னே, அதே குறைகூறி அழுகிற அழுகை இன்றும் இல்லையோ. அது உண்மை. ‘ஓ, அது ஒரு போதும் கிரியை செய்யாது; உங்களால் அதை கிரியை செய்ய வைக்க முடியாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்.’ இல்லை, அதை கிரியை செய்யும்படி வைக்க நம்மால் முடியாது தான், ஆனால் அது கிரியை செய்யும் என்று சொன்னவரால் அதை கிரியை செய்ய வைக்க முடியும். அவருடைய கட்டுப்பாட்டின் கீழாக ஜனங்களை அவரால் எப்பொழுதாவது கொண்டு வரக் கூடுமானால், அவரால் அதைச் செய்ய முடியும் என்று அவரிடம் ஒப்புவிக்கிறவர்களை அவர் பெற்றுக் கொள்வார், தேவன் அதைச் செய்வார் என்று நான் கூறுகிறேன். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்ற அத்தாட்சியை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். நாம் ஆயிரவருட அரசாட்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். அல்லேலூயா. நான் எப்படியாக அவரைத் துதிக்கிறேன். நாம் இந்நாட்களில் ஒன்றில் உள்ளே போகப் போகிறோம். கர்த்தருடைய சேனையின் அதிபதி வருகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை மேலே கொண்டு செல்வார். 34.யோசுவா, இரட்சகன்... மோசே சபை ஸ்தாபனத்திற்கு ஓர் முன்னடையாளமாக இருந்தான், அவன் நியாயப் பிரமாணத்தையும் மற்றவைகளையும் கொண்டு வந்தான், அவன் தோல்வி அடைந்தான். ஏன், அவன் எவ்வாறு தோல்வி அடைந்தான்-? தேவனுக்கு மகிமை செலுத்துவதற்குப் பதிலாக தன்னைத் தானே மகிமைப்படுத்தினான். அது சரியா-? அவ்வாறே இன்றைய சபையும் உள்ளது, மிகப்பெரிய சபையை யார் கட்ட முடியும் என்றும், நன்றாக உடையுடுத்தின பெருங் கூட்டத்தினரை யாரால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், பட்டணத்தின் மேயரையும், பிரபலமான எல்லா முக்கியஸ்தர்களையும் யாரால் சபைக்குள் கொண்டு வர முடியும் என்றும் காணவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாப்டிஸ்டுகள், ‘1954-ம் ஆண்டில் இன்னும் கூடுதலாக 10 இலட்சம் பேர்கள்’ என்று கூறுவதைப் போன்று, அது தான் இன்றைய திட்டமாய்் உள்ளது. எனக்குக் கவலையில்லை, இன்னும் கூடுதலாக 10 இலட்சம் பேர்கள் இருந்தால் என்னவாயிருக்கும்-? அது அதோடு முடிந்து விடும். இன்னும் கூடுதலாக 10 இலட்சம் அங்கத்தினர்கள் சேர்ப்பதா-? இருப்பினும் நீங்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆயிரமாயிரம் மடங்கு சபை அங்கத்தினர்களை சேர்ப்பதைக் காட்டிலும் பரிசுத்த ஆவியால், தேவனுடைய வல்லமையால் நிறைந்த ஒருவரை பெற்றிருப்பதே பெரிய அளவாக இருக்கும். விசுவாசமுடையவராய் தேவனோடு ஜீவிக்கிற ஒருவரைக் கொண்டிருப்பதே பெரிய அளவாக இருக்கும். நம்மால் எவ்வளவு பேரை சபையில் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்பதல்ல அது; விசுவாசித்து, தங்களையே ஒப்புவித்து, தங்கள் ஸ்தானத்தைக் கண்டறிந்து, தங்களுக்கு நியமிக்கப்பட்ட கடமையில், காலங்கள் தோறும் இருக்கிற கன்மலையைப் போன்று நிலைத்து நின்று, ஆயத்தமாயிருக்கிற எத்தனை பேரை நம்மால் கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டு வர முடிகிறது என்பது தான் அதுவாகும். ஓ, இன்றிரவு தேவன் இங்கேயுள்ள ஒவ்வொருவரையும் உறுதிப்படுத்தி, என்ன செய்ய வேண்டும் என்று அவர் உங்களை அறியச் செய்வார் என்று நம்புகிறேன், இந்த மிகப் பெரிய நெருக்கடியான நிலைமையில், நாம் காதேஸ்பர்னேயாவில் இருக்கிறோம். நாம்... 35. கவனியுங்கள். அவர்கள் அதைப் புறக்கணித்த காரணத்தால்... அவர்கள் அந்த வனாந்தரத்தில் 40 நீண்ட வருடங்கள் பிரயாணம் செய்தார்கள், இதற்கு காரணம் என்வென்றால் அவர்கள் அதைப் புறக்கணித்தனர். இந்த எல்லா காரியங்களையும் தடை செய்து வைத்திருப்பது என்ன... கிறிஸ்து வருகிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்... இது என் இருதயத்தில் இருக்கிறது; நான் கட்டாயமாக இதை நன்கு சொல்லியாக வேண்டும். கிறிஸ்துவின் வருகையானது ஏற்கனவே காலதாமதமாகி விட்டது, காலதாமதமாகி விட்டது. நீங்கள், ‘பிரசங்கியாரே, நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்-?’ என்று கேட்கலாம். ‘நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்’ என்று வேதம் கூறுகிறது. நோவாவின் நாட்களில், யாரும் கெட்டுப் போக விரும்பாமல், தேவன் நீடிய பொறுமை- யோடிருந்தார். தேவன் நீடிய பொறுமையோடிருக்கிறார். அவருடைய வருகை ஏற்கனவே கால தாமதமாகி விட்டது (past due). ஜனங்கள் தங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து இருப்பார்களானால், நாம் 40 வருடங்களுக்கு முன்பே ஆயிர வருட அரசாட்சிக்குள் போய் இருப்போம். ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் பின்வாங்கிப் போய், அந்த பழைய முறைமைக்குக் கீழாக (தங்களை) ஸ்தாபித்துக் கொண்டு, (பெந்தெகோஸ்தேயினரும் அவர்களில் மற்றவர்களும் கூட), விறைப்பாகிப் போயினர். அவர்கள், ‘நாம் ஒரு சபையைக் கொண்டிருப்போம், நாம் சபையைச் சேர்ந்து கொள்வோம். அவர்களைக் காட்டிலும் அதிகமான அங்கத்தினர்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்’ என்று கூறுகின்றனர். ஒருவர் கூட்டத்தில் எழுந்து நின்று, ‘இயேசு, வெள்ளைக் குதிரையில் வர மாட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்; அவர் வெண் மேகத்தில் வருகிறார்’ என்கிறார். அவர் அங்கு சென்று, அவருக்கென்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி, அதில் ஒரு சிலரைப் பெற்றிருக்கிறார். ஒருவர், ‘நாம் இவ்விதமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விசுவாசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்’ என்று கூறுகிறார். அவரும் தமக்கென்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். மற்றவரோ, ‘நாம் முன்னோக்கி ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விசுவாசிக்கிறேன்’ என்று கூறுகிறார். அவர் அதே உலகப்பிரகாரமான பழைமையான முறைமையைக் கொண்ட ஓர் ஸ்தாபனத்தை தமக்கென்று ஏற்படுத்திக் கொள்கிறார். ஆனால் தேவன் இக்கடைசி நாட்களில் குழப்பத்திலிருந்தும், இந்த எல்லாவற்றின் மத்தியிலிருந்தும் வெளியே அழைத்துக் கொண்டு இருக்கிறார். மனிதனால் அதைச் செய்ய முடியாது, அவனால் ஒரு போதும் அதைச் செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்து தாமே வந்து அழைக்க வேண்டும். அப்போது நாம் யோர்தானைக் கடந்து போவோம். நாம் யோர்தானைக் கடப்போம். 36. இப்பொழுது, அவர்களைக் கவனியுங்கள். அவர்கள் அங்கே வனாந்தரத்தில் இருந்தார்கள். இதோ அத்தாட்சி திரும்பி வருகிறது. அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று அவன் ஏன் விசுவாசித்தான்-? ஏன், மோசே சொன்னான்... நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்றால், தேவன் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து மோசேயோடு பேசி, ‘இப்பொழுது, கவனியுங்கள். நான் உங்களுக்கு பாலஸ்தீனாவைக் கொடுக்கிறேன். அது உங்களுடையது. அதை உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்தேன். நீங்கள் எல்லாரும் அங்கு பரதேசிகளாய் சஞ்சரிப்பீர்கள் என்று நான் அவனிடம் கூறினேன்...’ என்று கூறினார். நீங்கள் வேறொரு காரியத்தைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதைக் கொண்டு வர எவ்வளவு தலைமுறைகள் ஆனது. ஒரு சந்ததி என்பது 40, 50 வருடங்கள் என்று வேதத்தில் கருதப்படுகிறது. அப்படியானால் 400 வருடங்கள் என்பது 8 சந்ததிகளாகும். கவனியுங்கள், அப்போது அவர்கள்... நீங்கள் அறிந்து கொள்ளும் முதலாவது காரியம் என்ன என்றால், அவர்கள்... மோசே எழும்பினான், அவர்களோ பின்வாங்கிப் போய், இன்னுமொரு 40 வருடங்கள் தூர போய் விட்டனர். (பிறகு) அவர்கள் பாலஸ்தீனாவிற்கு வருகின்றனர், இன்னுமொரு 40 வருடங்கள்: இவ்வாறாக 10 தலைமுறைகள் ஆனது, அது நிச்சயமாகவே 10 கோத்திரங்களையும், மற்றும் பாதி கோத்திரங்களையும் (the ten tribes and the half tribes), அதை விடுவிக்கும் பொருட்டு, அவை பிரிக்கப்படும் நேரத்தையும் குறிக்கிறது. அது பரிபூரமாய் உள்ளது, அவர்கள் ஏவப்பட்டு எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளையும் எவ்வாறு பெற்றிருந்தனர், ஒரு வார்த்தையல்ல, ஆனால் வேதாகமத்தில் ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தின விசேஷம் வரை ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டவைகளை அவர்கள் பெற்றிருந்தனர். 37. அதன்பிறகு அவர்கள் நியாயந்தீர்க்கப்படக் கூடிய இடமாகிய காதேஸிற்கு வருகின்றனர். இப்பொழுது, சபையும் தாங்கள் நியாயந்தீர்க்கப்படக் கூடிய இடமாகிய காதேஸிற்கு வருகிறது. அதன் பிறகு சபைகள் எல்லாம் ஸ்தாபிக்கப்பட்டு, அவர்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ‘இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கலாமா-? ஆவியின் வரங்கள் சபைக்குத் திரும்பி வருவதை நாம் விசுவாசிக்கலாமா-? அது என்ன செய்யும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்; நம்முடைய காரியங்களை இவ்விதமாக எழுத்து வடிவில் ஆவணமாக ஆயத்தம் செய்து விடுவோம். நம்மால் அதற்குள் போக முடியாது’ என்று ஆலோசனை பண்ணினார்கள். அடுத்தவர், ‘நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றனர். மற்றவரும், ‘நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றனர். ஆனால் - என்று கூறின சில ஜனங்கள் அங்கு இருந்தனர், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்று, சுகமளித்தல் உண்மையானது, பரிசுத்த ஆவியும் உண்மையானது, தேவனுடைய வல்லமைகளும் உண்மையானது என்ற அதைக் குறித்த அத்தாட்சியோடு திரும்பி வந்தனர். நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள அதே வாக்குத்தத்த தேசமும் உண்மையாக இருக்கிறது. ஆம், ஐயா. 38. இப்பொழுது, யோசுவா யோர்தானைக் கடந்த பிற்பாடு, அங்கே சுற்றும் முற்றும் நடந்து கொண்டிருந்தான், அதன் பிறகு அவன் கொஞ்சம் நவதானியத்தைப் புசிக்கத் துவங்கினான்... ‘நான் உன்னோடு இருப்பேன். நான் மோசேயோடு இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்’ என்று கூறின இம்மகத்தான கர்த்தருடைய தரிசனத்தை யோசுவா கண்ட பிறகு, அந்தக் காலை வேளையில், அவனை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஒரு இரவில் அவனை அழைத்து, ‘இப்பொழுது, இங்கே பார், யோசுவா’ என்றார், அவர், அவனுக்கு ஓர் தரிசனத்தைக் கொடுத்து, ‘இப்பொழுது என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். நீயும் எல்லா இஸ்ரவேல் சேனைகளும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து போங்கள். உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடு இருந்தது போல, உன்னோடும் இருப்பேன். மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; அப்படியே தொடர்ந்து போங்கள், நான் உங்களோடு இருப்பேன். உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்’ என்றார். சகோதரனே, காலடிச் சுவடுகள் (footprints) என்பது சொந்தமாகக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இன்றிரவு சபைக்கு என்ன தேவை என்றால், இங்கே இத்தேசத்தின் மேல் இன்னும் கொஞ்சம் கூடுதலாக காலடிச் சுவடுகள் தான். நீண்ட காலமாக யோர்தானிலேயே தங்கியிருக்க வேண்டாம். நாம் இங்கிருந்து வெளியே சென்று, நாம் எதைப் பெற்றுக் கொண்டோம் என்று பார்ப்போம். சரி. அவன் காலடி எடுத்து வைத்த ஒவ்வொரு தடவையும், அவன் கால் பதித்த ஒவ்வொரு தடவையும் அது சுதந்தரமாக இருந்தது (அது சொந்த இடமாக ஆனது). யோசுவா அத்தரிசனத்தைப் பெற்ற பிற்பாடு, அவனை என்னால் காண முடிகிறது; அவன், ‘இப்பொழுது, சகல இஸ்ரவேலரும் கூடி வந்து, யோர்தானண்டையில் நில்லுங்கள். நீங்கள் உங்கள் வஸ்திரங்களை தோய்த்து, உங்களை நீங்களே பரிசுத்தம் பண்ணிக் கொண்டு, காலையில் அதன் கரைகளுக்கு வாருங்கள், தேவனுடைய மகிமை என்னவென்று நான் உங்களுக்குக் காண்பிப்பேன்’ என்றான். ஆமென். அவனுக்கு ஓர் தரிசனம் உண்டாயிருந்தது. தேவன் அவருடைய வார்த்தையை அவனிடம் கூறினார், வார்த்தையானது, ‘நான் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து விட்டேன். அது உங்களுடையது. அது உங்களுக்குச் சொந்தமானது’ என்று கூறுகிறது. 39.இப்பொழுது, அவன் ஏன் அதைச் செய்தான்... அவன் ஏன் அங்கு சென்று, எல்லா - எல்லா பெலிஸ்தியர்களையும் மற்றவர்களையும் துடைத்து அகற்றிப் போடவில்லை-? நான் ‘புறப்பட்டு வாருங்கள்’ என்று கூறலாம். நீங்களும் கூட ஏதோவொன்றைச் செய்தாக வேண்டும். தேவன் அப்படியே உங்கள் கழுத்தில் வலுக்கட்டாயமாக காரியங்களைத் திணிப்பதில்லை. நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும்; நீங்களும் கொஞ்சம் சண்டை செய்தாக வேண்டும். அந்நாளில் பீட்டர் கார்ட்ரைட் அந்தக் குடிகாரனிடம் கூறினது போல, உங்களில் அநேகர் அவருடைய காரியத்தை வாசித்திருக்கிறீர்கள், அவன் அவரிடம், ‘நீ இங்கே என்ன செய்யப் போகிறாய்-?’ என்று கேட்டான். ‘நான் ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறேன்’ என்றார். ‘யார் நடத்தச் சொன்னது-?’ என்று அவன் கேட்டான். ‘கர்த்தர் சொன்னார்’ என்று இவர் பதிலளித்தார். ‘அப்படியானால் நீ முதலில் என்னோடு சண்டையிட்டாக (whip) வேண்டும்’ என்று அவன் கூறினான். ‘நல்லது, அது தான் என்னுடைய அடுத்த வேலையாக இருந்தால், சரி அப்படியே செய்வேன்’ என்றார். அவருடைய கோட்டை கழற்றி, அவனை அடித்து, அவன் மேலேறி, அவனுடைய முகத்தில் குத்து விட்டு, ‘நான் அரசாள வேண்டுமானால், சண்டையிட்டாக வேண்டும், என் தைரியத்தை அதிகரியும், கர்த்தாவே’ என்றார். அவனை அடித்து தோற்கடித்து விட்டு, ‘இது போதுமா-?’ என்றார். அவன், ‘போதும்’ என்றான். அவன் அவருடைய கரத்தை குலுக்கி, அவருக்கு பின் வந்து இரட்சிக்கப்பட்டான். அது தான் நமக்குத் தேவை. நீங்கள் கொஞ்சம் சண்டையிட்டாக வேண்டும், உங்கள் கை முட்டியைக் கொண்டல்ல, ஆனால் தேவனுடைய வல்லமையைக் கொண்டும், உங்களுடைய சாட்சியைக் கொண்டும் சண்டையிட வேண்டும். அவ்வாறு தான் நீங்கள் ஜெயங் கொள்ள முடியும், ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தினாலும், உங்கள் சாட்சியினாலும் நீங்கள் ஜெயங் கொள்ளலாம். பிசாசினுடைய கயிறுகள் எதைக் கொண்டும் நீங்கள் கட்டப்பட்டு இருக்கவில்லை என்பதை அவனுக்குச் சொல்லுங்கள். ‘நீ என் மேல் இந்த வியாதியை வைத்திருக்கிறாய், ஆனால் இயேசு கிறிஸ்து அதிலிருந்து என்னை விடுதலையாக்கி விட்டார். அவர் அதை எனக்கு வாக்குப் பண்ணியுள்ளார்’ என்று கூறுங்கள். 40. இப்பொழுது, கவனியுங்கள். அவர், ‘நான் ஒரு அடையாளத்தை உங்களுக்கு அனுப்புவேன். அக்கினி ஸ்தம்பமானது உங்கள் பாதைகளெல்லாவற்றிலும் உங்களை வழிநடத்திச் செல்லும். நீங்கள் அப்படியே அதை பின்பற்றிச் செல்ல வேண்டும்; அது உங்களைக் கொண்டு செல்லும்’ என்றார். அது உண்மை. அவர்களும் சரியாக அங்கே போய் சேர்ந்து விட்டார்கள், அந்த அக்கினி ஸ்தம்பமானது ஒரு மனிதராக மாறியது. அவர், ‘நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி. நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்பொழுது தொடர்ந்து போவோம்’ என்று கூறினார். இப்பொழுது, அந்த மகத்தான தேசம் யாவும், இராணுவ வீரர்கள் யாவரும் அங்கே அவர்களுக்கு முன்பாக இருந்தார்கள். இப்பொழுது, கர்த்தருடைய சேனையின் அதிபதியும் கூட ஒரு இராணுவ வீரராகத் தான் இருந்தார். எனவே அவர், ‘இப்பொழுதும், யோசுவாவே, நீ இப்பொழுது பயப்படவே வேண்டாம். நான் உன்னோடு இருப்பேன், நீ உயிருள்ள நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை’ என்றார். ஓ, என்னே. யோசுவா, ‘இப்பொழுது, அத்தேசம் எவ்விதமாகத் தோற்றமளிக்கும் என்று நாம் பார்க்கப் போகிறோம்’ என்றான். ஆகையால் அவன் சில வேவுகாரர்களை அனுப்பினான். அவர்கள் அங்கு சென்றனர், அந்த இரவு முழுவதும் ராகாப் வேசி அவர்களை மறைத்து வைத்தாள். நீங்கள் வேறொரு காரியத்தைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் அங்கு மேலே ராகாப் வேசியின் வீட்டில் இருந்த போது, என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். ராகாப் வேசி அவர்களை தன்னுடைய விட்டுக் கூரையின் மேலே சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்து, அம்மனுஷர்களை வாசல்களுக்கு வெளியே அனுப்பினாள், மேலும் அவள் திரும்பி வந்து, ‘கவனியுங்கள்’ என்றாள்... இப்பொழுது, இந்த உற்சாகப்படுத்துகிற வார்த்தைகளை யோசுவாவிடம் திரும்பவும் கொண்டு செல்லும் படியாக, தேவன் எவ்வாறு அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். ‘உங்கள் நிமித்தமாக இத்தேசம் முழுவதிலும் உள்ள எல்லாருடைய தைரியமும் அற்றுப் போயிற்று. கர்த்தர் உங்களுக்காக செய்து உள்ளவைகளை நாங்கள் கேள்விப்பட்டோம்’ என்றான். ஆமென். எனக்கு அது பிடிக்கும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். தேவன் அதிசீக்கிரமாக வரப்போகிற நல்ல நேரத்தை வைத்து இருக்கிறார். ‘தேசம் முழுவதும் உங்களைக் குறித்து பயந்து நடுங்கிக் (afraid) கொண்டிருக்கிறது. கர்த்தர் சிவந்த சமுத்திரத்தை உலர வைத்து, உங்களை அதனூடாகக் கடக்கும்படி செய்து, பார்வோனுடைய சேனைகளை முழ்கடித்து, வனாந்தர வெளியிலே உங்களுக்கு மன்னாவைக் கொண்டு ஆகாரத்தைக் கொடுத்து, பாவ நிவிர்த்திக்காக ஓர் வெண்கல சர்ப்பத்தை மேலே உயர்த்தி வைத்ததை எல்லாம் நாங்கள் கேள்விப்பட்ட போது. அவர் இக்காரியங்கள் எல்லாவற்றையும் உங்களுக்காக செய்திருக்கிறார். நீங்கள் ஓகையும், மற்ற இராஜாக்களையும் அழித்ததையும் நான் அறிவேன். நீங்கள் முழுவதுமாக அழித்துப் போட்டதை நான் கண்டேன். நாங்கள் இவைகளையும், நீங்கள் எங்கள் பாதையில் முன்னேறி வந்து கொண்டிருப்பதையும் கேள்விப்பட்ட போது, நாங்கள் பயத்தால் செயலற்றுப்போனோம். எல்லாருடைய தைரியமும் அற்றுப் போயிற்று.’ 41. அவர்கள் திரும்பி வந்து, யோசுவாவிடம் அதைக் கூறின போது, அவன் அப்பட்டயத்தை சுழற்றி, ‘தேவனுக்கு மகிமை, அவர் நமக்கு முன்பாக இருக்கிறார்’ என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆமென். அவர்களை பயத்தால் செயலற்றுப் போகச் செய்தது எது-? அவர்கள் பெரிய ஆட்களாய் இருந்தும், அவர்களை பயத்தினால் மிகவுமாக செயலற்றுப் போகச் செய்தது என்ன-? ‘ஏன்,’ ‘அவர்களோடு ஒப்பிடும்போது, நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போன்று காணப்பட்டோம்’ என்று அவர்கள் கூறினர். அவர்களுடைய தைரியத்தை அற்றுப் போகப்பண்ண எவ்வாறு முடிந்தது-? அவர்கள் பெரிய கவண்களோடும், கற்களோடும், மற்றும் ஒவ்வொன்றோடும் அந்தப் பெரிய மதில்களுக்கு பின்னால் இருந்தனர், மேலும் அவர்களிடம் ஈட்டிகளும், மற்றும் ஒவ்வொன்றும் இருந்தது, அவர்கள் இவர்களைப் பார்க்கிலும் ஆயிரமாயிரம் மடங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தனர், அவர்கள் எண்ணிக்கையில் பெருகி அதிகமாய் இருந்தனர். நிச்சயமாக அவர்களால் முடிந்தது. அவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்திருந்தனர். ‘நம்மால் ஏன் அக்கூட்டத்தை விரட்டியடிக்க முடியாது, அவர்கள் ஒரு சிறு கையளவேயான சிறு கூட்டமாகவும், மிகச்சிறியவர்களாய் தோற்றமளிக்கும் ஜனங்களாவும், சண்டையிடுவதற்காக பழைய அரிவாள் கம்பிகளையும் மற்றும் காரியங்களையும் கொண்டவர்களாய் உள்ளனர், இப்படிப்பட்ட ஜனங்களை நம்மால் ஏன் விரட்டியடிக்க முடியாது-? அவர்கள் இராணுவ வீரர்களாகக் கூட இல்லையே, அவர்கள் கொண்டிருந்த ஒரே காரியம் என்னவெனில், சிறிய பழைய செருப்புகளை (sandals) அணிந்து கொண்டு அதனூடாக நடந்து வந்து கொண்டு இருக்கின்றனர், அவர்கள் யுத்த வீரர்களல்ல, அவர்கள் கூடாரத்தில் வாசம் பண்ணுகிற-வர்களாகவும், அதில் குடியிருக்கும் வாசிகளாகவும், அதிதீவிர மூடபக்தி வைராக்கியம் கொண்டவர்களாகவும், பரிசுத்த உருளையர்களாகவும் இருக்கிறார்கள். நல்லது, நம்மால் ஏன் முடியாது... அவர்கள் ஆற்றின் கரையில் நின்று கொண்டு, சத்தமிட்டுக் கொண்டும், கத்திக் கொண்டும், அவமானத்தை வருவித்துக் கொண்டும் இருக்கின்றனர்... நல்லது, நாம் ஏன் போர் கவசம் தரித்து, அவர்களுக்கு விரோதமாகப் போகக் கூடாது-?’ ஆனால் அவர்களுடைய இருதயத்தில் அங்கே எதுவுமே இல்லாதிருந்தது. ஏன்-? தேவன், ‘எனக்கு பயப்படும் பயத்தை உனக்கு முன் செல்லும்படி செய்வேன்’ என்று கூறியிருந்தார். ஆமென். அங்கே தான் அது இருக்கிறது. ‘எனக்கு பயப்படும் பயத்தை முன்னே செல்லும்படி செய்வேன், நீங்கள் என்னுடைய ஜனங்களும், என்னுடைய உடன்படிக்கையின் ஜனங்களுமாக இருக்கிறீர்கள். நான் உங்களைத் தெரிந்து கொண்டதன் மூலம் உங்களை அழைத்திருக்கிறேன். நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். நான் உங்களை அந்த சரீரத்திற்குள் வைத்திருக்கிறேன், நீங்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள். இப்பொழுது நீங்கள் விசுவாசிகள். நீங்கள் தொடர்ந்து போங்கள்; நான் உங்களோடு இருக்கிறேன். இவை அனைத்துமே உங்களுடையது.’ 42. இப்பொழுது, அதை இந்நாளோடு ஒப்பிடுவோம்; அந்த பாலஸ்தீனா இஸ்ரவேலருக்குச் சொந்தமானதாயிருந்தது. அது அவர்கள் வாசம் பண்ணுகிற அவர்களுடைய இடமாக இருந்தது. உங்களுக்கு அது புரிகிறதா-? அது அவர்கள் வாசம் பண்ணும் இடமாக இருந்தது, அது இஸ்ரவேலர் வாசம் பண்ணுவதற்கான அவர்களுடைய இடமாக இருந்தது. இச்சரீரம் உங்களுடையது. தேவன் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இது நீங்கள் வாசம் பண்ணும் ஸ்தலம். நீங்கள் அதைக் கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினார். ஆனால் பிசாசு உள்ளே வந்து, புற்று நோயையும், காச நோயையும், மற்ற வியாதிகளையும் வைக்கிறான். நீங்கள், ‘நான் அவனை வெளியே தள்ளி விடுவேன், நான் இதைச் செய்வேன். நான் அதைச் செய்வேன்’ என்று கூறுகிறீர்கள். ஆனால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? ஏதோவொன்று சம்பவித்து விட்டது. கர்த்தருடைய சேனையின் அதிபதியாகிய அந்த அக்கினி ஸ்தம்பம் நம் மத்தியில் வந்திருக்கிறது. இன்றிரவு ஜனங்களைக் கட்டி வைத்திருக்கிற ஒவ்வொரு பிசாசும் மரணத்திற்கேதுவாய் பயப்படுகின்றன. நிச்சயமாக அவைகள் பயப்படுகின்றன. அவைகள் பயத்தினால் செயலற்றுப் போயிருக்கின்றன. ஏன்-? அவைகள் கேட்டிருக்கின்றன... ஏன் - இந்த பெலிஸ்தியர்களும் மற்றவர்களும் ஏன் தைரியத்தை இழந்து போயினர்-? எரிகோவில் இருந்தவர்களுடைய தைரியம் ஏன் அற்றுப் போயிற்று-? காரணம் என்னவென்றால் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்த ஜனங்கள் உள்ளே வரும் பாதையில் இருந்தனர். ஆமென். வாக்குத்தத்தத்தைப் பெற்ற ஜனங்களாகிய உடன்படிக்கையின் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருக்கிற இந்த வாக்குத்தத்த ஜனங்கள் இக்கடைசி நாட்களிலும் கூட, தேவன் இச்சரீரத்தை எழுப்பி, அதைப் பரிபூரணப்படுத்துவார் என்ற ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்று இருக்கின்றனர். நாம் அதனுடைய தன்மைகளை இப்பொழுது பெற்றிருக்கிறோம். ஆகையால் அவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய பிதாவாகிய பிசாசானவன் கல்வாரியில் தோற்கடிக்கப்பட்டான். கர்த்தருடைய சேனையின் அதிபதியானவர் பரிசுத்த ஆவியின் வடிவில் உள்ளே வந்திருக்கிறார். பிதாவிலுள்ள விசுவாசம், குமாரனிலுள்ள விசுவாசம், பரிசுத்த ஆவியிலுள்ள விசுவாசம், மூன்றும் ஒன்று; பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர்; யெகோவாவில் விசுவாசம் எந்த காரியத்தையும் அசைக்கும். 43. அல்லேலூயா. பிசாசுகள் ஓய்வில்லாமல் கிரியை செய்து கொண்டிருக்கின்றன, சேனையின் அதிபதியாகிய கிறிஸ்து, ‘என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்’ என்று கூறியுள்ளார். அவர்கள் 40 வருடங்களுக்கு முன்பு அதைப் பெற்றுக் கொள்ளத் தவறி விட்டனர், ஆனால் நாம் இப்பொழுது உள்ளே வந்து தேசத்தை சுதந்தரிக்கிறோம். அதே அக்கினி ஸ்தம்பம், அதே சேனையின் அதிபதி கர்த்தருடைய சேனையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது உங்கள் தேசம். ஆரோக்கியத்தில் நீங்கள் செழித்திருக்கும்படி தேவன் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். அவர் உங்களுக்கு அச்சரீரத்தைக் கொடுத்திருக்கிறார். அது உங்களுக்குச் சொந்தமானது. பிசாசு அதை தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அதைச் செய்ய அவனுக்கு அதிகாரம் கிடையாது. அவன் இன்றிரவு பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கிறான். அல்லேலூயா. தேவனுடைய வல்லமையின் மகத்தான சுழல்காற்று கட்டிடத்தில் அசைவாடிக் கொண்டிருக்கிறது, சாத்தானோ நடுங்கிக் கொண்டிருக்கிறான். ஓ, அவர்கள் மாத்திரம் விசுவாசம் கொண்டிருப்பார்களானால், எப்படியிருக்கும்-? அவனுடைய இருதயம் ஏறக்குறைய அவனுக்குள் உருகிப் போய் விட்டது; ஏன்-? ‘ஓ,’ நீங்கள், ‘நல்லது, நான்... என்று மருத்துவர் கூறிவிட்டார்’ என்று கூறலாம். அது சரிதான், ஆனால் இப்பொழுது கர்த்தருடைய சேனை அசைந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்கிறார்கள். அது உண்மை. அவன் அதை எவ்வளவு உயரமாக அரணாக்கியுள்ளான் என்பது ஒரு பொருட்டல்ல. அவன் ஒருக்கால் மருத்துவருடைய பார்வைக்கு அப்பால் அதை அரணாக்கி இருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வைக்குப் புறம்பே அவன் அதை அரணாக்கவில்லை. அவன் ஒருக்கால் மருத்துவ விஞ்ஞானத்திற்கு ஒரு மகத்தான பெரிய வெற்று வேட்டாக (வெற்று வீம்புப் பேச்சு) இருக்கலாம், ஆனால் அவன் தேவனுக்கு வெற்று வேட்டாக (வெற்று வீம்புப் பேச்சு) இல்லை. அல்லேலூயா. 44. யோசுவா, இரட்சகன். ‘யோசுவா’ என்ற வார்த்தைக்கு ‘இரட்சகர்’ என்று அர்த்தம். அவர் உள்ளே அசைவாடிக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேண்டாம். விசுவாசியுங்கள். இன்றிரவு அதைக் கட்டுக்குள் கொண்டு வர இதோ அவர் இருக்கிறார். ஆமென். நான் எவ்வளவாக அதை நேசிக்கிறேன். இன்றிரவு அக்கினி ஸ்தம்பம் நம்மோடு உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தருடைய சேனையின் அதிபதி இன்றிரவு இங்கே இருக்கிறார். பட்டயம் உருவப்பட்டு விட்டது. அவன் ஒருக்கால் அந்த மருத்துவ அறிகுறியைக் குறித்து பயந்து கொண்டிருக்கலாம்; இதற்கு மாறாக அவன் ஒருக்கால் அதைக் குறித்து பயப்படாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர்களால் ஒரு போதும் முடியாதிருக்கிறது... அவர்கள் கடினமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், புற்று நோயைக் குணமாக்கும் ஏதோவொன்றை, இந்த காரியங்களை குணமாக்கும் ஏதோ ஓன்றை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆனால் பிசாசு தான் அவர்களிடத்தில் வெற்று வீம்பு பேச்சை பேசுகிறதாக இதுவரையில் நினைத்துக் கொள்கிறான். ஆனால் கிறிஸ்துவின் பட்டயம் இறங்கி வருகிற போது, அவனால் அதை ஒரு போதும் எதிர்த்து நிற்க முடியாது. அவர் ஒவ்வொரு புற்று நோயையும் கட்டிலிருந்து வெட்டி கட்டவிழ்த்து விடுவார்; குருடர்களையும், உபத்திரவப்படுகிறவர்களையும் தூக்கி விடுவார். அவர் அதை எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்றிரவு இயற்கைக்கு மேம்பட்ட மகத்தான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகவும், மகத்தான இருக்கிறவராகவும் (I AM), மகத்தான அல்பாவும், ஒமேகாவுமாகவும், ஆதியும் அந்தமுமாகவும் இங்கே இருக்கிறார். ஏன்-? அத்தேசம் நமக்கு சொந்தமானது. ‘என்னிடத்தில் வருகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனைக் கொடுத்து, அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.’ ஆமென். நாம் அதைக் குறித்த அத்தாட்சியை இங்கே பெற்றிருக்கிறோம். கடந்த வாரம் மேயோ மருத்துவ மனையிலும் மற்ற இடங்களிலும் கைவிடப்பட்டவர்களாய், ஒருபோதும் சுகமடையவே முடியாமல், என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல், மரித்துக் கொண்டிருக்கிறவர்களாய் படுத்திருக்கிற ஜனங்கள் இன்றிரவு பரிபூரண சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்: அத்தாட்சி. தேசம் நம்முடையது. அல்லேலூயா. நாம் அதை பெற்றுக் கொள்வோம். ஆமென். நாம் ஆளுகை செய்வோம். தேவன் அதை நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார். அது உங்களுக்குச் சொந்தமானது; அது எனக்குச் சொந்தமானது. நீங்கள் பட்டயத்தை உருவினால், அது உங்களுக்குச் சொந்தமானது. நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியம் இதுவே. உள்ளே நடந்து சென்று, மதிற்சுவரை இடித்துப் போடுங்கள். அல்லேலூயா. யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஓ கிறிஸ்தவ வீரர்களே, முகமுகமாக, கடுமையாக, போர்க் கருவிகள் பளபளக்கின்றன, நிறங்கள் பளிச்சிடுகின்றன, நன்மைக்கும் தீமைக்கும் இன்று போர் நடக்கின்றது-! யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் சோர்வடையாதீர்; பெலனடைந்து, அவர் பெலத்தில் உறுதியாய் நில்லுங்கள்; தேவன் நமது பட்சத்திலிருந்து, அவர் மகிமை நம்மேல் இருந்தால், முடிவில் நாம் வெற்றி பெற்றோரின் பாட்டைப் பாடுவோம்-! நாம் அதைப் பெற்றிருக்கிறோம். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு இப்பொழுது இங்கே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? 45. ஓ கர்த்தராகிய இயேசுவே, தேவ குமாரனே, புறஜாதி சபைக்கான இம்மகத்தான யோசுவா வனாந்தரத்தின் இந்த குழப்பத்திலிருந்து எங்களை வழிநடத்துகிறார், கர்த்தாவே, பிள்ளைகளின் அப்பத்தை பறித்து விட்ட வழிகாட்டிகளின் காரணத்தால், அலைந்து திரியும் அற்பமானதும் கொஞ்சமானதுமான பரதேசிகள் வனாந்தரத்தின் வழியாக மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் சுற்றிப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஓ யோசுவாவே, யோசுவாவே, இருக்கிறவராகிய கர்த்தராகிய இயேசுவே, அதிகாரமுள்ள விசுவாசத்தோடு இன்றிரவு உள்ளே அசைவாடும். இன்றிரவு இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதியஸ்தரையும் உரிமை கோரும். இங்கே ஒரு பாவி இருப்பானென்றால், அவனை உரிமை கோரி, அவனை அசையும், நாங்கள் இங்கே யோர்தானில் இருக்கிறோம் என்பதை அவன் அறிந்து கொள்ளட்டும். ஓ தேவனே, இந்நாட்களில் ஒன்றில் நீர் உம்முடைய பிள்ளைகள் யாவரையும் ஒன்று கூட்டி, உம்முடைய இரத்தத்தின் மூலமாக அவர்களை பரிசுத்தப்படுத்துவீர். அத்தேசத்தைக் காணும் படியாக அந்த கரையின் ஓரமாக அவர்களைக் கொண்டு வந்து, ஒரு கணத்தில், ஒரு இமைப் பொழுதில், அவர்களை மறுரூபப்படுத்தி, யோர்தானைக் கடந்து செல்லும்படி செய்வீர். நாங்கள் அந்த மணி நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, நீர் இயேசுவை அனுப்ப வேண்டுமென்று நாங்கள் இன்றிரவு ஜெபிக்கிறோம், அவர் இப்பொழுது இந்த சபையோரிடத்தில் வந்து அவர் செய்வார் என்று கூறியிருக்கிற காரியங்களைச் செய்வாராக, வியாதியஸ்தரையும் உபத்திரவப்படுகிறவர்களையும் சுகம் ஆக்குவீராக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 46.தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். என் அன்பு சகோதரனே, சகோதரியே, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருபோதும் தவறிப் போக முடியாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். அவரால் தவறிப் போக முடியாது. நாம் இன்றிரவு எதை நோக்கியிருக்கிறோம்-? நாம் இன்றிரவு ஒரு வழி நடத்துபவரைப் பெற்றுள்ளோம். இது இரண்டாவது யோசுவா, இவர் கர்த்தருடைய சேனையின் அதிபதியாகிய கர்த்தராகிய இயேசு தாமே. அவரைத் தவிர வேறு யாருமல்ல. அவர் தம்முடைய ஜனங்களோடு இருக்கிறார். அவர் இங்கே வல்லமையோடு இருக்கிறார். அவர் சபைக்குள் அத்தாட்சியைக் கொண்டு வந்து, அவரே சுகமளிப்பவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய ஜனங்கள் மூலமாக அத்தாட்சியை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார். அவர் இறங்கி வந்து, தம்முடைய படத்தை நாம் எடுக்கும்படி அனுமதித்தார். உங்களுக்குக் காண்பிக்கும்படியாக அவரால் செய்ய முடிந்த யாவற்றையும் செய்து கொண்டு இருக்கிறார், நீங்கள் மெதோடிஸ்டு சபையையோ, பாப்டிஸ்டு சபையையோ, அல்லது பெந்தெகோஸ்தே சபையையோ, அல்லது பிரன்ஹாம் கூடாரத்தையோ சேர்ந்து கொள்வதல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவை சேர்ந்து கொண்டு, அவரிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பதாகும். யாவுமே, நீங்கள் எந்த சபைக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதனோடு செய்வதற்கு எதுவும் கிடையாது. அது தேவனோடுள்ள உங்கள் இருதயமாகும், அது தேவன் எதைப் பார்க்கிறார் என்பதாகும். அது உண்மை. இயற்கைக்கு மேம்பட்ட உயர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவாக அவரை விசுவாசியுங்கள். 47. இங்கு எழுந்து நின்று, ‘சரி, இப்பொழுது, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக என்னைத் தானே அந்த குறிப்பிட்ட மேலான தகுதி நிலைக்கு இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுகிற ஒரு பாவி இங்கு உண்டா-? எழுந்து நில்லுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, ஒரு விசுவாசியாக இருக்க விரும்புகிற ஒரு பாவி இங்கிருந்தால், எழுந்து நில்லுங்கள். நீங்கள் அதைச் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். கர்த்தராகிய இயேசு... நான் அறிந்துள்ள வரையில், ஒரு பாவியும் இக்கூட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு அது தெரியும். 48. அந்த வெள்ளை நிற சால்வையை அணிந்து கொண்டு, அங்கே கீழே அமர்ந்திருக்கிற சீமாட்டியே, தேவன் உன்னுடைய கீல்வாத நோயிலிருந்து இப்பொழுது தான் உன்னை சுகப்படுத்தினார். உன்னுடைய காலூன்றி எழுந்து நில். அது போய் விட்டது, இல்லையா-? அது உண்மையானால், உன்னுடைய கையை அசைத்துக் காட்டு. அந்த கீல்வாதத்தினால் உண்டான மூட்டு வலி போய் விட்டது. அது உண்மையா-? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை சுகப்படுத்தியிருக்கிறார். நீ சுகமடைந்து விட்டாய். 49. ஸ்திரீகளுக்குரிய கோளாறைக் கொண்டவளாய் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, அம்மனிதருடைய தோளைப் நோக்கியபடி, அங்கே பின்னால், சிவப்பு மேலாடையை அணிந்து உள்ள அந்த சீமாட்டிக்கு மறுபக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஸ்திரீகளுக்குரிய கோளாறைக் கொண்டிருக்கிற சீமாட்டியே, ஆமாம், நீ எழுந்து நில். அங்கே பழுப்பு நிறமாக காணப்படுகிற சிறு தொப்பியை அணிந்துள்ள சீமாட்டியே, உனக்கு ஸ்திரீகளுக்குள்ள கோளாறு உள்ளது, இல்லையா சீமாட்டியே-? உன்னிடம் ஜெப அட்டை இல்லை, ஜெப அட்டை உள்ளதா-? உன்னிடம் ஜெப அட்டை இல்லை அல்லவா-? உன்னிடம் உள்ளது. சரி, உனக்கு அது அவசியமில்லை; நீ சுகமடைந்தவளாய் வீட்டிற்குப் போகப் போகிறாய். அது உண்மை. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஸ்திரீகளுக்குள்ள அந்த கோளாறிலிருந்து சீழ் இடைவிடாமல் போய்க் கொண்டிருக்கிறது, அது சரிதானே-? அது ஒரு சீழ் படிந்த கட்டியாக உள்ளது, அது தான் அது. உன்னுடைய பக்கவாட்டில் வலியுள்ளது, அதிலிருந்து சீழ் வந்து கொண்டிருக்கிறது. அது சரியல்லவா-? அது உண்மையானால், உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. பாருங்கள்-? இப்பொழுதிலிருந்து இனிமேல் அது உனக்கு இருக்காது; இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி இருக்கிறார். 50. இந்த சீமாட்டி இருக்கிற இடத்தில் தேவனுடைய தூதனானவர் நின்று கொண்டிருக்கிறதைக் காண்கிறேன். அது ஒரு பருத்த சீமாட்டி. அவர்கள் சிவப்பு நிறத்தைப் போன்று காணப்படும் கம்பளிச் சட்டையை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் நரம்பு சம்பந்தமான கோளாறினால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் விடுதலையாக வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணிக் கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது சரியல்லவா, சீமாட்டியே-? அது சரியானால், உன்னுடைய கரத்தை ஆட்டு. நீ இப்பொழுதே சுகமாகி விட்டாய்; நீ வீட்டிற்குப் போகலாம். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கியிருக்கிறார். நேற்றிருந்த அதே இயேசு கிறிஸ்துவே இன்றும் இருக்கிறார். 51. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற வாலிபனே, உனக்குப் அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்தப் பையனின் தோளின் மேல் உன்னுடைய கரத்தை வை. போய் அவனுடைய இரவுணவை சாப்பிடும்படி அவனிடம் சொல்லு. அவனுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது. அவன் இப்பொழுது சுகமாகி விட்டான். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ இப்பொழுது வீட்டிற்குப் போ, நீ சுகமாய் இருக்கப் போகிறாய். நீ கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறாய், அப்படித் தானே-? நீ சுகமடைந்து விட்டாய் என்று விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாய். ஒரு சாட்சிக்காக நீ ஒரு நிமிடம் எழுந்து நில். இப்பொழுது நீ வீட்டிற்குப் போ. நீ முழுவதும் நரம்புத் தளர்ச்சி உடையவனாயும், அதிர்ச்சி அடைந்தவனாயும் மற்றும் எல்லாமாயும் இருந்திருக்கிறாய். நீ சுகமடைந்தவனாய் வீட்டிற்குப் போகப் போகிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 52. ஒரு சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்... அங்கே பின்னாலிருக்கும் அந்த ஆளுக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது, அங்கே உமக்கு பின்னால் இருப்பவர். கர்த்தராகிய இயேசு உம்மை சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீரா-? நீர் அவ்வாறு விசுவாசிக்கிறீரா, ஐயா-? அவர் உம்மை சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீரா-? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உம்முடைய விசுவாசம் உம்மை சுகமாக்கிற்று. உனது கரத்தை அங்கே உனக்கு அடுத்திருக்கிற சீமாட்டியின் மேல் வை, ஏனென்றால் அவர்கள் எலும்பு முறிவினால் அவதிப்படுகிறார்கள். அவர்களும் கூட சுகமடைய விரும்புகிறார்கள். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீயும் கூட சுகமடையப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ ஒருக்கால்... உனக்கு அடுத்திருக்கும் சிறுவனும் கூட சிறுநீரக கோளாறைக் கொண்டிருக்கிறான். மகனே, நீ சுகமடைய விரும்புகிறாயா-? நீ உன் காலூன்றி எழுந்து நின்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள். நீ சுகமடைந்து விட்டாய் என்று விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உன்னை விட்டுப் போய் விட்டது. 53. இஸ்ரவேலரை வழிநடத்தின கர்த்தருடைய தூதனானவராகிய அந்த யோசுவா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். அவர் தம்முடைய வல்லமையிலும், உயர்த்தெழுதலிலும் இங்கே இருக்கிறார். உங்களுக்கு ஒரு ஜெப வரிசை தேவையில்லை. உங்களுக்கு விசுவாசமே அவசியமாயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசித்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே எழுந்து நின்று, உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொண்டு, சுகமடைந்தவர்களாய் வீட்டிற்குச் செல்லுங்கள். களிகூர்ந்து கொண்டு அவருக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங்கள். உங்களை சுகமாக்கினதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் அதை விசுவாசித்தால், உங்கள் கரங்களை அசைத்துக் காட்டுங்கள். ஐயா, எழுந்து நில்லுங்கள், நீர் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதால், எந்த மேலான காரியத்தையும் உம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் எழுந்து நின்று, தேவனுக்கு துதியை செலுத்துங்கள். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் சுகப்படுத்தும். *******